வில்லங்க சான்றிதழில் "முளைத்த" பிரச்சனை.. திடீர் திடீர்னு மாயமாகுதாமே.. அதிர்ந்த ஆபீசர்ஸ்.. என்னாச்சு
சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும்நிலையில், பகீர் குற்றச்சாட்டு ஒன்று கிளம்பி உள்ளது.. இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை அமைச்சரிடமும் புகார் சென்றுள்ளது.. என்ன நடந்தது?
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்ட சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
வில்லங்கம்: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்..
தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம்..!!
வில்லங்க சான்றிதழ்: இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை. இப்படி விண்ணப்பிக்கும்போது, இரண்டு அல்லது மூன்று நாட்களில், வில்லங்க சான்றிதழ் வழங்க வேண்டும்.. ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இதுபோன்று ஆன்லைன் முறையில் பதிவாகும் விண்ணப்பங்களுக்கு, உரிய காலத்தில் வில்லங்க சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுகின்றன..
அதாவது, ஆன்லைனில் 24 மணி நேரமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள், காலை முதல் மாலை வரையே செயல்படுகின்றன.
விண்ணப்பங்கள்: அதிலும், மாலை 4 மணி வரை பதிவாகும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. அதற்கு பிறகு, அலுவலக நேரம் முடிந்து விடுவதால், 4 மணிக்கு மேல் பதிவாகும் விண்ணப்பங்கள் மீது மறுநாள் காலை தான் நடவடிக்கை எடுக்க முடிகிறது.. இந்த விஷயத்தை தான் பதிவுத் துறை சமீபத்தில் கையில் எடுத்திருந்தது. பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, அதன்பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஆன்லைனில் வில்லங்க சான்று விண்ணப்ப பதிவில், மாலை, 4 மணிக்கு மேல் பதிவாகும் விண்ணப்பங்களை, அடுத்த நாள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று விரைவில் உத்தரவிடப்போவதாக தெரிகிறது.
மாயமாகும் தகவல்கள்: இந்நிலையில், இன்னொரு பிரச்சனை முளைத்துள்ளது.. ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில், 5க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் பதிவாகும் நிலையில், அதற்கான வில்லங்க சான்றிதழில், சில தகவல்கள் மாயமாகி விடுகிறதாம்.. இந்த தகவல்கள் விடுபடுவதற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் தரப்பில் சொல்லும்போது, ஒரு குறிப்பிட்ட நிலம், 8 பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதில் 5வது உட்பிரிவு வரை, எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. இதற்கு மேல் உட்பிரிவுகள் ஏற்படும்போது, அதன் பிரதான சர்வே நம்பரை குறிப்பிட்டு வில்லங்கம் பார்த்தால், 6வது அதற்கு அப்பால் ஏற்பட்ட உட்பிரிவு விபரங்கள் மட்டுமே வருகின்றன. 5வது வரையிலான உட்பிரிவுகளில் நடந்த பரிமாற்ற தகவல்கள் விடுபடும் நிலை ஏற்படுகிறது.
அமைச்சர் உறுதி: இதனால், வீடு வாங்குவோர் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும், கட்டுமான அனுமதி, வங்கிக்கடன் பெறுவதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. பதிவுத்துறையின், ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் இதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவுத்துறை அமைச்சரிடம் புகார் தந்துள்ளோம். இதையடுத்து, பதிவுத்துறை அமைச்சரும், டிசிஎஸ் கணினி தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, உரிய மாற்றங்கள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்" என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications