பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை! அதிகாலையில் பரபரப்பு..காரணம் என்ன?
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் வசூலைப் பார்த்து வருமான வரி சோதனை வரலாம் என்று நடிகர் பார்த்திபன் சொன்ன நிலையில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா. 'கத்தி' 'கோலமாவு கோகிலா' 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. தொழிலதிபர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பாமக எம்எல்ஏ ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் செயல்பட்டு வருகிறார்.

கமலின் இந்தியன் 2 ரஜினி நடிக்கும் லால் சலாம், அஜித் நடிக்கும் விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமானது 300 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தி.நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications