அங்கே என்ன நடக்குது? சென்னையில் காலையிலேயே அமலாக்கத்துறை ரெய்டு.. கூடவே துணை ராணுவம்.. யாரந்த புள்ளி
சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், மிகப்பெரிய பரபரப்பு காலை நேரத்திலேயே ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சமீப காலமாகவே, அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் நிறைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..

அமைச்சர்கள்: முக்கியமாக, தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொருமுறை ரெய்டுகளின்போதும், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருகிறார்கள்.. இது தொடர்பான விசாரணையையும் நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகிறார்கள்,
10 நாட்களுக்கு முன்புகூட, சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்... கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்றது.. 4 நாட்களுக்கு முன்பும், சென்னையில் பிரதான இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அமலாக்கத்துறை: சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் சில கட்டுமான நிறுவனங்களில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடப்பதாக அமலாக்கத்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து, ஆர்ஏ புரம், ஈசிஆர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில், இன்று மீண்டும் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.. சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
என்ன காரணம்: சோதனை நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஒரே நேரத்தில் சென்னையின் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாரிந்த நரேஷ்: சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ். இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.. அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications