சென்னையில் பிரபல நகைக்கடை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னை: சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள மோகன் லால் நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் பூக்கடை அருகில் உள்ள மோகன் லால் நகைக்கடை ஒன்றில் சோதனை செய்வதற்காக அமலாக்கத்துறையினர் சென்றனர். மொத்தம் 5 அதிகாரிகள் அந்த நகைக்கடையில் சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர். இதேபோல் சென்னை பாரிமுனையில் மற்றொரு நகைக்கடையில் சோதனை செய்வதற்காக அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அது தொடர்பான இடங்கள் என மொத்தம் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்பட 7 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள 2 நகைக்கடையில் 10 அதிகாரிகள் இரண்டு குழுவாக பிரிந்து சோதனை நடத்துகின்றனர். வழக்கமாக அமலாக்கத்துறையினர் காலை 6 மணிக்கோ அல்லது 8 மணிக்கோ தான் சோதனையை தொடங்குவது வழக்கம்.
ஆனால் இந்த முறை மதிய வேளையில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்கின்றனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு என்ன காரணம் என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. எனினும், அமலாக்கத்துறைக்கு கிடைத்து இருக்கும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறையினருடன் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications