Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையிலேயே வந்த அமலாக்கத்துறை.. வைத்திலிங்கம் குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிரமாக சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இரண்டாவது நாளாக சென்னை அசோக் நகர் உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்ததார். அப்போது சென்னை பெருங்களத்தூரில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது..

vaithilingam enforcement department

அறப்போர் இயக்கம் அளித்த அந்த மனுவில், "சென்னை பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.) கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தது.

அந்த திட்டத்திற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காமல் கடந்த 2016-ம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். இந்த பணத்தை 'பாரத் கோல் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் மூலம் தனது மகன்கள் பிரபு, சண்முக பிரபு ஆகியோர் இயக்குனர்களாக இருந்த முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கடன் பெற்றது போன்று வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான விசாரணை நடத்தினார்கள். இதில் வைத்திலிங்கம் மீதான முறைகேடு உறுதி செய்தார்கள். இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவர்கள் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம், ஸ்ரீராம் குழும கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் ஆகிய 5 பேர் மீதும், 6 நிறுவனங்கள் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். முறைகேடான பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வைத்திலிங்கம் மீதும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனையடுத்து நேற்று காலையிலயே அமலாக்கத்துறை அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினர் 5 கார்களில் ஒரத்தநாடு அருகேவுள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனைநடத்தியது. அவரிடமும், அவரது மனைவியிடமும், மாமியாரிடமும் விசாரணை நடத்தியது.

இதேபோல் வைத்திலிங்கத்தின் மைத்துனரும், பிரபுவின் மாமனாருமான பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை செய்வதற்காக பேய்க்கரும்பன் கோட்டைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றார்கள். ஆனால் அங்கு வீடு பூட்டியிருந்ததால் அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பன்னீர்செல்வத்தின் உறவினர்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் சென்றனர்.அங்கு பூட்டியிருந்த வீட்டை உறவினர்கள் முன்னிலையில் உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தினர். மேலும் பிரபுவின் மனைவி, மாமியாரையும் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

வைத்திலிங்கத்தின் சென்னை அலுவலகம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் உள்ளது. அங்கும் நேற்று காலையில் 6-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள் சென்னை அசோக் நகரில் வைத்திலிங்கத்தின் மகன்கள் நடத்தும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சோதனை நடத்த வந்தபோது அலுவலகம் பூட்டி இருந்ததால், 2 மணி நேரம் காத்திருந்தார்கள். பின்னர் சாவியை வாங்கி அந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனையை நடத்தினார்கள். மேலும் வழக்கில் புகார் கூறப்பட்ட ஸ்ரீராம் குழும அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இதுதவிர வைத்திலிங்கம் தொடர்புடைய கட்டுமான நிறுவனததில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவரது வீடு சென்னை திருவேற்காடு கோ ஆப்ரேட்டிவ் நகர் அண்ணம்மாள் தெருவில் இருக்கிறதாம். அங்கும் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் நேற்று சோதனை நடந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை அசோக் நகர் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனையில், முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விவரம் தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+