Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு குட்நியூஸ்.. அமலாக்கத்துறை வழக்கில் முதல் வெற்றி? ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தியுள்ளது. முன்னதாக, அவர் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 முதல் 12 மணி வரை சென்னை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டியிருந்தது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ரி அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை அதிகாரி தேவைப்படும்போது முன் அறிவிப்புடன் ஆஜராக உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் என்பதால், தொடர் ஆஜர் அவசியமில்லை என்றார். அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஸோஹேப் ஹுசைன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டே நிபந்தனை விதிக்கப்பட்டது என்றார். பணமோசடி வழக்கில் செப்டம்பர் 2024-ல் ஜாமீன் வழங்கப்பட்டபோது இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

Senthil Balaji Tasmac

உச்ச நீதிமன்றம் கேள்வி

வாரத்திற்கு இருமுறை அதிகாரி முன் ஆஜராகக் கோருவதன் நியாயத்தன்மையை அமர்வு கேள்வி எழுப்பியது. "ஒருவர் ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமையும் உங்களிடம் வந்து, உங்கள் அதிகாரியுடன் ஒரு கப் தேநீர் குடிக்கிறார். இது அவசியமா?" என்று தலைமை நீதிபதி காந்த் நேரடியாகவே வினவினார்.

"ஒன்றரை ஆண்டுகளாக ஒருவர் வாரத்திற்கு இருமுறை வந்து செல்கிறார்... அவர் ஏதேனும் தவறு செய்துள்ளாரா? இம்முறை உங்கள் அதிகாரிக்கான சிரமத்தையாவது தவிருங்கள். ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமையும் இவருக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது," என்று நீதிபதி பக்ரி மேலும் குறிப்பிட்டார்.

விசாரணை நடக்கும் ஒவ்வொரு நாளும் சிறப்பு பி.எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜராகும் மற்றொரு ஜாமீன் நிபந்தனையையும் உச்ச நீதிமன்றம் மாற்றியது. "குறிப்பிட்ட அசௌகரியம் ஏற்படும்போது, மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை எனில், அவர் விண்ணப்பிக்கலாம்; நீதிமன்றம் அதன் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி - வழக்கின் பின்னணி என்ன?

ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக்கூடாது என்று நாங்கள் (SC ) சொல்லவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால் அவருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அதில் அனுமதி பெற்று அவர் அமைச்சராகலாம். ஆனால் அதற்கு முன் அவர் விதிகளை மீறக்கூடாது.

ஜாமீன் விதிகளை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு. தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்து இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

செந்தில் பாலாஜி - வழக்கில் நடந்தது என்ன?

லஞ்சம் மற்றும் பணமோசடி வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு அளித்த சில கருத்துகளை நீக்கக் கோரி முன்னாள் தமிழக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, விண்ணப்பத்தின் நேரம் மற்றும் நோக்கத்தை ஆராய்ந்தது. "நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த விண்ணப்பத்தை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?" என்று நீதிபதி காந்த் விசாரித்து, பாலாஜியின் நடவடிக்கையின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார்.

அரசு சார்பில் ஆஜரான வழக்கரிங் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனு நல்ல நோக்கம் கொண்டது அல்ல என்றும், சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் விவரித்தார்.

செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீன் உத்தரவை கொடுக்கும் போது அமைச்சராக கூடாது என்று தடை எதுவும் இல்லை. வழக்கில் நேரடியாக உத்தரவில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. அமைச்சராவது எதிராக கோர்ட் தீர்ப்பில் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார். அவர் விசாரணையை எதிர்க்கவில்லை. அப்படி இருக்க.. அவர் அமைச்சராவதை தடுக்க முடியாது.

செந்தில் பாலாஜி அமைச்சர்

இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எதிராக கடுமையான கருத்துக்களை கோர்ட் தெரிவித்து உள்ளது. ஆனால் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆகும் முன்.. நீங்கள் அமைச்சராக விரும்பினால் அதற்கான மனுவை தாக்கல் செய்யலாம். செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்து இருக்கலாம். அவர் உரிய மனுவை SC யில் தாக்கல் செய்யலாம், என்று நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.

இந்த லஞ்ச பணமோசடி வழக்கை மொத்தமா டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றலாமே.. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக் கூடாது? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதில் 2 வாரங்களில் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+