செந்தில் பாலாஜி வழக்கில் செம்ம ட்விஸ்ட்- சகோதரர் அசோக் குமார் கைது இல்லையாம்- அமலாக்கத்துறை
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவே இல்லை என அமலாக்கத்துறை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தார்; இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றது என கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகள் நடத்தியது.

இந்த சோதனைகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் முடிவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதித்தது.
இதனடிப்படையில் செந்தில் பாலாஜி காவலில் எடுக்கப்பட்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையில் பல கேள்விகளுக்கு தமது சகோதரர் அசோக்குமாருக்குதான் அனைத்தும் தெரியும் என செந்தில் பாலாஜி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் அசோக்குமார் நேற்று கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவின.
இதனிடையே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், அமலாக்கத்துறையால் கைது செய்யப்படவில்லை எனவும் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications