டாஸ்மாக் உள்ளே போகத்தான் தடை.. உதயநிதி நண்பர்களை விசாரிக்க அல்ல? அமலாக்கத்துறை புது பிளான்
சென்னை: டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள விசாகன் ஐ.ஏ.எஸ். மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகள் மீதான அமலாக்கத்துறையின் விசாரணை நடவடிக்கைகளுக்கு சமீபத்தில் இடைக்கால தடை கொடுத்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இந்தத் இடைக்கால தடை உத்தரவை ஒட்டுமொத்த டாஸ்மாக் விவகாரத்திற்கும் பொருந்தும் என்பது போல திமுக வழக்கறிஞர்கள் மேலிடத்திற்கு சொல்லியிருந்தனர். இதனால் திமுக மேலிடமும் உதயநிதியும் அவரது நண்பர்கள் தரப்பும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், கடந்த 1 வாரமாக இருந்த உற்சாகம், தற்போது குறைந்திருக்கிறதாம்.
அதாவது டாஸ்மாக் அதிகாரிகள் மீதான விசாரணைக்குத்தான் தடையே தவிர, இதில் தொடர்புடைய உதயநிதியின் நண்பர்களான ரத்தீஸ், ஆகாஸ், விக்ரம் ஜுஜூ, கே.எஸ்.மார்ட் கேசவன் உள்ளிட்ட மற்றவர்களுக்குக் கிடையாது என்பதை சீனியர் வழக்கறிஞர்கள் திமுக மேலிடத்துக்குச் சொல்லியிருக்கிறது. இதனால் தான் அந்த உற்சாகம் மிஸ்ஸாகியிருக்கிறது.
உற்சாகம் மிஸ்ஸிங்
அமலாக்கத்துறையின் ரெய்டால், உதயநிதியின் நண்பர்களில் ரத்தீசும் கேசவனும் வெளிநாட்டுக்குச் சென்று விட்டனர். மற்றவர்கள் தமிழகத்தின் அருகாமை மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றனர். ஒரே மாநிலத்தில் ஜாகை செய்யாமல் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தனர். மேலும் இந்த தடை உத்தரவால் தங்களுக்கும் ரிலீஃப் கிடைத்திருப்பதாக நினைக்கும் ஆகாஸ்பாஸ்கரனும், விக்ரமும் சென்னைக்குள் ரகசியமாக வந்துள்ளனர்.

அவர்கள், உதயநிதியை சந்திக்க விரும்பிய போது, வரக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக கட்டளையிடப்பட்டதாம். காரணம், இந்த பிரச்சனைக்குப் பிறகு உதயநிதியை யார் யார் சந்திக்க வருகிறார்கள்? யாரிடமெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள் என்கிற கண்காணிப்பை கூடுதல் ஆக்கியிருக்கிறதாம் அமலாக்கத்துறை. இதனையறிந்ததால்தான் உதயநிதியை சந்திக்க தடை விதிக்கப்பட்டதாம்.
சென்னையை விட்டு செல்லுங்கள்
மேலும், சென்னையை விட்டு மீண்டும் தலைமறைவாகுங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருக்கும் ரத்தீசும் கேசவனும் சனிக்கிழமையில் சென்னை வருவதற்கு டிக்கெட் போட்டப்பட்டதாம். ஆனால், ரத்தீசுக்காக வலை விரித்து காத்திருக்கும் அமலாக்கத்துறை, அவரை அலேக்காக தூக்க திட்டமிட்டுள்ளதாம்.
உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள ரிலீஃப், ரத்தீஸ் உள்ளிட்ட வர்களுக்கு பொறுந்தது என்பதால் ரத்தீஸ், கேசவன் இருவரும் சென்னைக்கு இப்போதைக்கு வர வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து அவர்களுக்கு பாஸ் ஆகியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலை வைத்துக்கொண்டு, எந்த இடத்திலாவது தங்களுக்கு சாதகமான வரிகள் இருக்கிறதா? என்றும், அமலாக்கத்துறை தங்களை நெருங்கக்கூடாது என்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள் என்றும் திமுக தரப்பில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications