அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு.. சென்னை, கரூரில் பரபரப்பு
சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் 2011- 2015ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் வழக்குப் பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.
அது போல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து கடந்த 16 ஆம் தேதி விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதிகள் அமர்வு பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் அமலாக்கத் துறையினர் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அது போல் சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் இறுதியில் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த நிலையில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications