ஆட்டம் காணும் அஸ்திவாரம்.. விசாகன் ஐஏஸ் லேப்டாப்பில் சிக்கிய ஆதாரம்? பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை
சென்னை: டாஸ்மாக் மது விற்பனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்த புகாரில் டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் விசாகன் ஐஏஎஸ்-ன் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறையின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் மது விற்பனை நடைபெறுகிறது. மது விற்பனை மூலம் மட்டுமே ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை மற்றும் மதுபான ஆலைகளுடன் இணைந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இதனை சட்ட விரோதமாக அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அமலாக்க துறையின் அடுத்த கட்ட விசாரணைக்கும் தடையில்லை என அறிவித்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் அமலாக்கத்துறை தமிழகத்தில் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ன் வீட்டில் அவரிடமும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றும் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அது மட்டும் இல்லாமல் ரித்தீஷ் என்பவரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பராசக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் விசாகன் ஐஏஎஸ் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் விசாகனின் செல்போன் மற்றும் லேப்டாப்பை சோதனை செய்த போது அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல் சூளைமேட்டில் மதுபான நிறுவனத்தின் பிஆர்ஓ மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணி தேவகுமார், சாஸ்திரி நகர் மின்வாரிய ஒப்பந்ததாரரான ராஜேஷ் குமார், சேத்துப்பட்டு கேசவன், எம்ஆர்சி நகரில் தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் அது முடிவடைந்திருக்கிறது. நள்ளிரவு இரண்டு மணி வரை சோதனை நடைபெற்ற நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் காரில் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் கிடைத்த ஆவணங்கள், அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து அமலாக்கத்துறை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications