செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்க ஆவணங்கள், 120 பக்க குற்றப்பத்திரிகை.. மிரள வைத்த அமலாக்கத்துறை!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் மற்றும் 3,000 பக்கத்திற்கு ஆதாரங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஏழாம் தேதி முதல் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன்படி, செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை நகல்கள், பினாமி சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
5 நாட்கள் காவல் முடிவடைந்ததை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறையினர் துன்புறுத்தினார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, துன்புறுத்தவில்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
அப்போது அவரை மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிடக் கேட்டு அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையுடன், 3,000 பக்க ஆதார ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து, அமலாக்கத்துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தக் குற்றப் பத்திரிக்கையில் முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும் அவர் பெயர் தவிர அவரது சகோதரர் அசோக் குமார் உட்பட வேறு யார் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றப் பத்திரிகையில் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், சட்டவிரோத வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப் பத்திரிக்கை நகல் செந்தில் பாலாஜிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications