இரட்டை இலை வழக்கு.. திடீர் திருப்பம்.. மாற்றி மாற்றி பேசும் சுகேஷ்.. டிடிவி தினகரனுக்கு சம்மன்
சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஆஜராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தது.
இதையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என இரு அணிகளும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சசிகலா அணி
சசிகலா அணி தரப்பில் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் அணியினர் முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ரூ 50 கோடி லஞ்சம்
இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் ரூ 50 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதில் முன்பணமாக ரூ 2 கோடியை தினகரன் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. இதில் "சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்தது கூட இல்லை என தெரிவித்திருந்தார்.

பண மோசடி வழக்கு
இந்த நிலையில் பல்வேறு பணமோசடி வழக்குகளில் சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பண மோசடி தொடர்பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 15 ஆம் தேதி வரை காவலில் எடுத்துள்ள அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

ரூ 2 கோடி இல்லை ரூ 10 கோடி
இந்த நிலையில் முன்பு தனக்கு டிடிவி தினகரன் ரூ 2 கோடி லஞ்சம் முன் பணம் கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர் தற்போது திடீரென 10 கோடி ரூபாய் கொடுத்ததாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முக்கிய சாட்சியான கோபிநாத் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இரட்டை இலை வழக்கில் விசாரணை நடத்த வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி டிடிவி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications