இரட்டை இலைக்கு லஞ்சம்.. ஏப்.21 இல் டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ 50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அமலாக்கத் துறையினர் தினகரனிடம் விசாரணை நடத்தினர்.

 சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ் சந்திரசேகர்

அப்போது சுகேஷ் சந்திரசேகர் தனக்கு யாரென்றே தெரியாது என்றும் அவரிடம் தான் பேசியது கூட இல்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் தினகரன் முன் பணமாக ரூ 2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

சுகேஷின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இந்த நிலையில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் தினகரன் கடந்த 12 ஆம் தேதி ஆஜரானார்.

சுகேஷின் வாக்குமூலம்

சுகேஷின் வாக்குமூலம்

சுகேஷின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சுகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தினகரன் தனக்கு ரூ 10 கோடி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இதை டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

மாற்றி மாற்றி வாக்குமூலம்

மாற்றி மாற்றி வாக்குமூலம்

ஒவ்வொரு முறையும் சுகேஷ் தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி கூறுகிறார் என்றும் அவரை யாரோ இயக்குகிறார்கள் என்றும் அவர்கள் யாரென தெரியவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார். இந்த நிலையில் தினகரனிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+