‛‛புதிய வைரஸ்’’.. கொரோனாவைபோல் மனிதர்களை தாக்க வரும் பேராபத்து.. தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை
சென்னை: கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கானவர்களை கொன்று ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிவிட்டது. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் போன்ற பெரும்தொற்று எப்போது வேண்டுமானாலும் உலக நாடுகளை தாக்கலாம். இது விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என இங்கிலாந்து தொற்றுநோய் நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடுகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டது. 2020ல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியா உள்பட பல நாடுகளில் பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் கொத்து கொத்தாக மக்கள் மரணமடைந்தனர். 2020 மார்ச் மாதம் 11ம் தேதி கொரோனா வைரஸ் என்பது உலகளாவிலய இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.
இதையடுத்து 2022ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர்கள் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளனர். அதாவது உலகம் கொரோனா போன்ற இன்னொரு பெருந்தொற்றால் மனிதர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸால் இந்த பேரிடம் ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி லண்டனர் கிங்ஸ் கல்லூரியின் தொற்றுநோய் மருத்துவரான டாக்டர் நதாலின் மெக்டெர்மாட் கூறுகையில், ‛‛அடுத்து ஒரு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கலாம் அல்லது 20 ஆண்டுகளுக்குள் நடக்கலாம். மேலும் அதன் தாக்கம் என்பது நீண்டகாலம் இருக்கலாம். இதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மீண்டும் நாம் சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
புவி வெப்பமடைதல் மற்றும் காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் பரவி நோயை ஏற்படுத்தும் சாத்தியம் என்பஅதிகமாக உள்ளது. குறிப்பாக அமேசான் மற்றும் ஆப்பிரிக்காவில் மரங்களை வெட்டுவதன் மூலம் விலங்கு, பூச்சிகள் மனிதர்களை நெருங்கி வாழ தொடங்குகின்றன. இதனால் நோய் பாதிப்பு என்பது ஏற்படலாம்’’ என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications