லாக்டவுனை என்ஜாய் பண்ணுங்க.. குடும்பத்தோடு ஹேப்பியா இருங்க.. கொரோனாவை விரட்டியடிங்க!
சென்னை: கொரோனாவுக்குப் பயப்படுவதை விட்டு விட்டு அதிலிருந்து நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது. ரொம்ப சிம்பிங் மக்களே.
தேவையில்லாத பயத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். வருமோ வராதோ அடுத்த பிரச்சினை.. ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும். வீட்டோடு இருக்க வேண்டும். கட்டுப்பாடு காக்க வேண்டும். கவனமுடன் செயல்பட வேண்டும்.
உலகெங்கும் பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கொடிய நோய் கொரோனா வைரஸ். இந்த நோய் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது கொரோனா.

வீட்டிலேயே இருப்போம்
அதனால் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்களாகிய நாம் நம்மை எப்படிக் காத்துக் கொள்வது என்பதை அறிவோம். வீட்டை விட்டுத்தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள். வீட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெளியில் வையுங்கள். அதில் பால் பாக்கெட்டுகளைப் போடச் சொல்லுங்கள். பிறகு அதை எடுத்துப் பயன்படுத்துங்கள்.

யார் போக வேண்டும்
அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சூடான நீரைப் பருகுங்கள். உங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு உங்கள் வீட்டில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள நபரை அனுப்புங்கள். வெளியே செல்வதற்கென தனி உடை வைத்துக் கொள்ளுங்கள். தனி பை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று வந்தவுடன் மஞ்சள் கலந்த நீரில் கை கால்களைச் சுத்தம் செய்தபின்னர் வீட்டினுள் நுழையுங்கள். பின் அந்த உடையை நன்கு சூடான நீரில் ஊற வைத்துத் துவைத்துவிடுங்கள்.

சுத்தம் அவசியம்
இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளைச் சுத்தம் செய்யுங்கள். வீட்டிற்குப் பணியாளர்கள் வருவதை முடிந்தவரைத் தவிருங்கள். கொரோனாவிற்கான அறிகுறி தெரிந்தால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இப்போது விடுமுறை அளிக்கப்பட்டது சுற்றுலாவிற்கான விடுமுறை அல்ல. உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கொரோனா நெருங்காமல் இருப்பதற்கான விடுமுறை. அத்தியாவசியப் பொருட்களுக்காக வெளியேச் செல்லும் போது ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும்.

தடை நல்லதே
அரசாங்கம் நம்மை வீட்டிலிருக்கச் சொல்வது நமது நன்மைக்காகவே. அனைத்து விதமான அரசுப் பணியாளர்களும் காய்கறி மற்றும் மளிகைக்கடை வியாபாரிகளும் வங்கிப் பணியாளர்களும் ஊடகத்தினரும் மக்களுக்காக இரவுப்பகல் பாராதுப் பாடுபடுகின்றனர். அவர்கள் உங்களிடம் வேண்டிக் கேட்பது ஒன்றுதான். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராதீர் என்பது தான்.அஇதையெல்லாம் நாம் நினைத்துப் பார்த்து தேவையில்லாமல் வெளியில் உலாவுவதைத் தவிர்ப்போம். நமக்காகப் பணி செய்யும் நல்ல உள்ளங்களுக்குத் தலைவணங்குவோம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications