ஹைகோர்ட் விமர்சனம்.. ரூ. 1 லட்சம் அபராதம்.. மேல்முறையீடு செய்கிறார் விஜய்.. 2 பின்னணி காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை ஹைகோர்ட் விதித்த அபராதம் மற்றும் நீதிபதியின் கருத்துக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய் உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறார். விரைவில் இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுதாக்கல் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட உள்ளது.

Recommended Video

    Seeman Advice To Vijay | அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது | Oneindia Tamil

    நடிகர் விஜய் தொடுக்க போகும் மேல்முறையீட்டு வழக்கு குறித்து பார்க்கும் முன்.. அவரின் ரோல்ஸ் ராய்ஸ் குறித்த ஒரு குட்டி ஸ்டோரி. நடிகர் விஜய் 2012ல் கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து வாங்கினார்.

    இவர் நேரடியாக காரை வாங்கவில்லை. மாறாக சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமில் இருந்து காரை வாங்கினார். கார் வாங்கும் போதே அதற்கு இறக்குமதி வரியாக ரூபாய் 1.8 கோடியை செலுத்தினார்.

    நுழைவு வரி

    நுழைவு வரி

    இந்த நிலையில் நுழைவு வரி கட்டினால்தான் வண்டிக்கு ரிஜிஸ்டிரேஷன் செய்ய முடியும் என்று போக்குவரத்துத்துறை அவரிடம் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத விஜய், நான் ஏற்கனவே தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு, தயாராக உள்ள காருக்கு இறக்குமதி வரி கட்டி காரை வாங்கி இருக்கிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டு ஷோரூமில் இருக்கும் காருக்கு ஏன் மீண்டும் நுழைவு வரி கட்ட வேண்டும்.

    ஏன் கட்ட வேண்டும்

    ஏன் கட்ட வேண்டும்

    தமிழ்நாடு மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி வேண்டாம் என்று ஏற்கனவே கூறி உள்ள போது ஏன் நான் கட்ட வேண்டும் என்று விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் மாநில நுழைவு வரி தொடர்பான அந்த வழக்குக்கு எதிராக அப்போது மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்ததால், நுழைவு வரி கட்டினால்தான் காரை அனுமதிப்போம் என்று போக்குவரத்து துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

    கண்டிப்பு

    கண்டிப்பு

    இதையடுத்து நுழைவு வரிக்கு எதிராக விஜய் சென்னை ஹைகோர்ட் சென்றுள்ளார். 2012ல் இந்த வழக்கில், சென்னை ஹைகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், விஜய் 20% நுழைவு வரியை செலுத்திவிட்டு காரை பயன்படுத்தலாம் என்று கூறியது. இதையடுத்து விஜயும் 20% நுழைவு வரி மட்டும் செலுத்திவிட்டு காரை பயன்படுத்தினார்.

     கார் எப்படி

    கார் எப்படி

    விஜயை இந்த கருப்பு நிற காருடன் பலர் பொது நிகழ்ச்சிகளில் பார்த்து இருக்க முடியும். அவர் ஹைகோர்ட் தீர்ப்புப்படி 20% நுழைவு வரி கட்டியதால்தான் இந்த காரை பயன்படுத்த முடிந்தது. விதிப்படி இவர் ஹைகோர்ட் உத்தரவை மதித்து ஏற்கனவே அவர்கள் குறிப்பிட்ட நுழைவு வரியை செலுத்திவிட்டார். இந்த நிலையில்தான் தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    அதேபோல் மீதம் உள்ள வரியை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் விஜய் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு மேல்முறையீடு செய்ய உள்ளார். அதன்படி, வழக்கு தொடுப்பது தனிப்பட்ட உரிமை, நுழைவு வரிக்கு எதிராக பலர், முக்கியமான பிரபலங்கள் பலர் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இல்லை.

    மீதம் உள்ள

    மீதம் உள்ள

    அதேபோல் மீதம் உள்ள வரியை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் விஜய் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு மேல்முறையீடு செய்ய உள்ளார். அதன்படி, வழக்கு தொடுப்பது தனிப்பட்ட உரிமை, நுழைவு வரிக்கு எதிராக பலர், முக்கியமாக பிரபலங்கள் பலர் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இல்லை.

    அபராதம்

    அபராதம்

    அப்படி இருக்கும் போது தனக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என்றும், தன்னுடைய தனிப்பட்ட அரசியல், சமூக நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகவும் விஜய் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். நுழைவு வரிக்கு எதிராக வழக்கு தொடுத்ததற்காகவே ஒரு லட்சம் அபராதம் விதித்தது தவறு என்று கூறி மேல்முறையீடு செய்ய உள்ளார்.

    மற்ற வழக்குகள்

    மற்ற வழக்குகள்

    இதற்காக நடிகர் விஜயின் சட்ட குழு மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து வருகிறது. இந்தியா முழுக்க நுழைவு வரிக்கு எதிராக பல்வேறு பிரபலங்கள் வைத்த கோரிக்கைகள், வழக்குகள் குறித்து முன்னுதாரணத்தோடு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. திங்கள் கிழமை இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+