கட்டுக்கட்டாய் கரன்சி ... புதையல் போல சிக்கிய தங்க வைர நகைகள் - பொறியில் சிக்கிய பாண்டியன்
சுற்றுச்சூழல் துறை அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாய் கரன்சிகளும், தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் போல தங்கம் வைரம், நகைகளும் சிக்கியுள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடையும் வகையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணமும், வைர நகைகளும், தங்கம், வெள்ளி பாத்திரங்களும் சிக்கியுள்ளன. லஞ்சமாக வாங்கி சேர்த்து வைத்த அந்த அதிகாரி இப்போது பொறியில் சிக்கிய எலியாக மாட்டிக்கொண்டார்.
அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து சாட்டையடி கொடுத்தனர். லஞ்ச ஊழல் பற்றி எத்தனையோ திரைப்படங்களில் காட்சி அமைப்புகள் சித்தரிக்கப்பட்டாலும் அரசு அலுவலங்களில் கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரை லஞ்சத்தில் ஊறிப்போய் உள்ளனர் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி அளிக்க பல்வேறு நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வருவதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனின் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கூடுதல் எஸ்.பி. லாவண்யா தலைமையில் நேற்று மாலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. அலுவலகம் மட்டுமல்லாது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாண்டியனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பீரோவில் பணம்
பாண்டியனின் வீட்டில் கிடைத்த பொருட்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
வீட்டில் உள்ள பீரோவில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 500 ரூபாய் நோட்டுக்களையும் அடுக்கி வைத்து இருந்தார் பாண்டியன்.

தங்க வைர ஆபரணங்கள்
தங்கம், வைரம், தங்க செயின், பிரேஸ் லெட், வளையல்கள், ஆரம், மோதிரங்கள் என 20 வகையான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன.நீளமான வைர மாலை ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளது.

வெள்ளிக்குத்துவிளக்கு பாத்திரங்கள்
வெள்ளியில் விதவிதமான நகைகளும் பீரோவில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. வெள்ளி தட்டுகள், வெள்ளி குத்து விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவையும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. பாண்டியனை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல தகவல்கள் வெளியே வந்துள்ளன.

தரகராக செயல்பட்ட பாண்டியன்
லஞ்சப்பணத்தில் உல்லாச பயணமும் சென்று வந்துள்ளார் பாண்டியன். அதிகாரிகளையும் பெண்களையும் சுற்றுலாவிற்கு அழைத்து சென்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலநாள் தப்பி வந்த பாண்டியன் இப்போது பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறார். லஞ்ச வாங்கிய விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால்,தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் பல அதிகாரிகளின் தலைகளும் உருளும் வாய்ப்பு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications