Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EPFO: விதிகளை மாற்றும் இபிஎப்ஓ.. இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்! பிஎப் சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருங்கால வைப்பு நிதியில் இருந்து சந்தாதாரர்கள், இனி அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கும் போது, தகுதியுள்ள தொகையில் 100 சதவீதம் வரை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய வாரிய ட்ரஸ்டீஸ் (சிபிடி) கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இபிஎஃப்ஓ எனப்படும் பிஎஃப் என்பது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியாகும். இந்த பிஎஃப் கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12% வரை ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவிலான தொகையை நிறுவனமும் சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்கில் செலுத்த வேண்டும்.

epfo-eases-rules-members-can-now-withdraw-up-to-100-of-their-epf-savings

பிஎஃப் பணம் பிடித்தம்

நிறுவனம் செய்யும் பங்களிப்பானது 3 ஆகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, செலுத்தப்படும் தொகையில் 3.67 சதவீதம் இபிஎஃப்ஓக்கும், 8.33 சதவீதம் இபிஎஸ்க்கும், சிறிய அளவிலான பங்கு இன்சூரன்ஸுக்கும் செல்கிறது. ஊழியர்கள் ஓய்வு பெறும் போது இந்த பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை மீண்டும் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்.

அதே நேரத்தில், ஊழியர்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில்தான், பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளைத் தளர்த்தி, 100% வரை பணத்தை எடுக்க அனுமதிக்கும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்று வகைகளாக பிரிப்பு

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சிபிடி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டங்கள் சந்தாதாரர்களின் சிரமத்தை குறைத்து, அவர்கள் அவசர தேவைக்கு பணம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இபிஎஃப் திட்டத்தில் உள்ள 13 சிக்கலான விதிகளை ஒன்றிணைத்து, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள். இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட, 100% வரை பணத்தை எடுக்க முடியும்.

கல்விக்கு 10 மடங்கு

கல்விக்கான பணம் எடுக்கும் வரம்பு 10 மடங்காகவும், திருமணத்திற்கான வரம்பு 5 மடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருமணம் மற்றும் கல்விக்கு மொத்தம் 3 முறை மட்டுமே பகுதியளவு பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், அனைத்து பகுதியளவு பணம் எடுப்பதற்கும் குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நெருக்கடி சூழல்களில் பணம் எடுப்பதற்கான காரணங்களை இனி சந்தாதாரர்கள் விளக்கத் தேவையில்லை. அதாவது, இதற்கு முன்பு இயற்கை சீற்றங்கள், பணி செய்யும் நிறுவனம் மூடல், தொடர்ந்து வேலையின்றி இருப்பது போன்ற காரணங்களைச் சந்தாதாரர்கள் பணம் எடுக்கும் போது அளிக்க வேண்டியிருந்தது.

8.25% வட்டி விகிதம்

இது பல சமயங்களில் பிஎஃப் பணத்தை கிளெயிம் செய்யும் போது நிராகரிக்கப்பட வழிவகுத்தது. இதனை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், உறுப்பினரின் கணக்கில் 25% பங்களிப்பு குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்கப்படும்.

இது இபிஎஃப்ஓ வழங்கும் 8.25% வட்டி விகிதத்தைப் பெறவும், ஓய்வூதியத்திற்காக ஒரு பெரிய நிதியை உருவாக்கவும் உதவும். மேலும், இந்தச் சீர்திருத்தம் பணத்தை எடுப்பதை எளிதாக்குவதோடு, ஓய்வூதியத்திற்கான நிதியை உறுப்பினர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆவணங்கள் எதுவும் தேவையில்லாமல், 100% தானியங்கி முறையில் பகுதிப் பணம் எடுப்பதற்கு இது வழிவகுக்கிறது.

இபிஎஃப்-ன் முதிர்வு பெறாத இறுதி செட்டில்மென்ட் எடுப்பதற்கான காலக்கெடு 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாகவும், ஓய்வூதிய இறுதி செட்டில்மென்ட் 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள், உறுப்பினர்கள் தங்கள் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு, ஓய்வூதிய சேமிப்பிலும் சமரசம் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+