பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம்
சென்னை:வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 'நிதி ஆப்கே நிகத்' (வைப்பு நிதி உங்கள் அருகாமையில்) என்ற பெயரில், பிஎஃப் தொடர்பான புகார்களைத் தீர்க்க ஒவ்வொரு மாதமும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் குறைதீர்க்கும் முகாம்களை நடத்துவது வழக்கம். சென்னை உள்பட 10 நகரங்களில் வரும் மார்ச் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில், கணக்குதாரர்கள் தங்கள் பிஎஃப் பணம், ஓய்வூதியம் மற்றும் ஆவணப் பிழைகள் தொடர்பான புகார்களை நேரில் அளித்துத் தீர்வு காணலாம்.
மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் பலருக்கும் பிஎஃப் பிடிக்கப்படும். மாதம் மாதம் கணிசமான தொகை நிறுவனமும் வழங்க வேண்டும். இந்த பணத்தை அவசர தேவைக்காக பயன்படுத்துவர்கள் அதிகம். வேலை இல்லாத சூழலில் முழு பணத்தையும் எடுக்க முடியும். இதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். குறிப்பாக முதல் முறையாக பிஎஃப் பணம் எடுப்போர் தவிப்பார்கள். அதேபோல் பிஃஎப் பணம் தொடர்பாக பல சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுபற்றிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவ்வப்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் முகாம் நடைபெறும்..'

பிஎஃப் பணம் எடுப்பது, பிஎஃப் கணக்கு மாற்றுதல், ஓய்வூதியம் மற்றும் பெயர்/பிறந்த தேதி திருத்தம் போன்ற சேவைகளை பெறுவதில் சிக்கல் இருந்தால் அல்லது அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பிஎஃப் சந்தாதாரர்களுக்காக கூட்டம் நடைபெறும்.. அதில் கலந்து கொண்டு பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
இந்நிலையில் சென்னை வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-I ஹிமான்ஷு குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "'நிதி ஆப்கே நிகத்' அதாவது வைப்புநிதி உங்கள் அருகாமையில் என்ற குறைதீர்க்கும் முகாம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை 10 இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம், கோயம்பேட்டில் உள்ள சென்னை டீலக்ஸ் ஓட்டல், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்துறை வளாகத்தில் உள்ள திட்ட அலுவலகம், பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள சான் அகாடமி, காஞ்சீபுரம் ஈ.கே.சந்நதி தெருவில் உள்ள ராயல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.
முகாமில், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், முதலாளிகளிடம் இருந்து பெறப்படும் குறைகளை நிவர்த்தி செய்தல், தொழிலாளர்களுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முகாமில் பங்கேற்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLScO8I5lQXzkQf19iEfEqnb16Zlknj-YFoXRK5QGhHPdoddu6Q/viewform?usp=sharing-amp;ouid=106859029795621361670 என்ற படிவத்தில் விவரத்தை நிரப்பி அனுப்பவேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் வருகிற 27ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆசாரிபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறவுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 58 வயதை அடையும் உறுப்பினர்கள் ஓய்வூதிய ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக முகாமில் கலந்து கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என நாகர்கோவில் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் அனில் குமார் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications