சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியுடன் 10 நிமிடங்கள் தனியே சந்தித்து பேசிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்.. என்ன பேசினார்கள் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனியாக 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    சென்னை: பிரதமருடன் தனியே சந்தித்து பேசிய ஈபிஎஸ்… 10 நிமிடங்கள் நடந்த ‘பரபர’ டிஸ்கஷன்!

    தமிழக சட்டசபை தேர்தல் மே மாதத்திற்குள் நடைபெறவுள்ளது. இரு ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பதை அறிய திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

     தமிழகம் டாங்கிகள் தாயாரிப்பிலும் மையமாக திகழுகிறது: பிரதமர் மோடி புகழாரம் தமிழகம் டாங்கிகள் தாயாரிப்பிலும் மையமாக திகழுகிறது: பிரதமர் மோடி புகழாரம்

    ஒரு பக்கம் பிரச்சாரம், மறு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை என கட்சிகள் படுபிஸியாக இருக்கின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார்.

    கேரளம்

    கேரளம்

    தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகம் வந்த மோடி ரூ 8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழா முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர், துணை முதல்வர் இருவரின் கைகளையும் உயர்த்தி பிடித்துக் கொண்டார்.

    நரேந்திர மோடி

    நரேந்திர மோடி

    இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வரும் துணை முதல்வரும் தனியாக சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் கூட்ணி குறித்தும் தேர்தல் குறித்தும் இந்த ஆலோசனை நடந்திருக்கலாம் என தெரிகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர்.

    மோடி

    மோடி

    தமிழக மக்கள் அதிருப்தி கொண்டுள்ள திட்டங்கள் குறித்தும் இருவரும் மோடியிடம் பேசியிருக்கலாம் என்றும் தெரிகிறது. பிப் 8-ஆம் தேதிக்கு பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் எப்படி வெல்ல வேண்டும் என முனைப்பு காட்டி வரும் முதல்வரும் துணை முதல்வரும் அதற்கான திட்டங்களை மோடியிடம் பேசியிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

    10 நிமிடம்

    10 நிமிடம்

    இந்த தனியாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட திட்டங்கள் குறித்த மக்களுக்கு ஆதரவான விஷயத்தை தேர்தல் அறிக்கையில் அறிவிப்பது குறித்து பேசினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. அதே வேளையில் வெறும் 10 நிமிடங்களில் எல்லா விஷயத்தையும் பேச முடியாது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேசியிருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

    English summary
    Edappadi Palanisamy and O Paneer selvam discussed with PM Narendra Modi after Chennai function over.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X