இதுதான் ட்விஸ்ட்.. பாஜக நினைத்தால் ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் இணைவார்கள்.. பத்திரிகையாளர் ஆர்.கே.!
சென்னை: பாஜக நினைத்தால் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் இணைவார்கள் என பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் போட்ட வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கு 2, 3 எம்எல்ஏக்களே இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது பாஜக ஏன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தருகிறது தெரியுமா?

பாஜக
பாஜக எப்போதும் வீக்கான தலைவர்களையே விரும்பும். அதாவது பாஜக இல்லாமல் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாத தலைவர்களையே பாஜக விரும்பும். இதற்கு பாஜகவில் இருக்கும் பல தலைவர்களை உதாரணமாக சொல்லலாம். ஒரு கட்சியில் இருக்கும் வீக் லீடர் பாஜக என்ன சொன்னாலும் செய்வார். அது போன்றதொரு வீக் லீடர்தான் ஓபிஎஸ்.

பொதுக் குழு கூட்டம்
பொதுக் குழுவை கூட்ட மறுத்தால் மற்றொரு தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்ற தீர்ப்புதான் பாஜகவுக்கு தேவையாக இருந்தது. இன்று முதல் அதிமுகவை சிதைக்கும் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டே இருந்தால் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை இப்படியே கோர்ட், கேஸ் என இருக்கும். அதன் பிறகும் அதிமுகவை சிதைப்பதையே பாஜகவின் இலக்காக இருக்கும்.

இரண்டாவது கட்சி
ஏனென்றால் தமிழகத்தல் இரண்டாவது கட்சியாக பாஜக வளர வேண்டுமானால் அதிமுகவை முற்றிலும் சிதைத்தால்தான் அது நிகழும் என பாஜக கருதுகிறது. இது போன்ற வேலையை பாஜக மட்டுமல்ல மற்ற கட்சிகளும் செய்யும். இதற்கு கடந்த கால உதாரணங்கள் உள்ளன. அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்வதை தவிர வேறு வழியில்லை.

சமாதானம்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை அணுகி, நீங்கள் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர் என சமாதானம் பேசுவது என்பது பாஜக விரும்பினால் மட்டுமே அது நடக்கும். நான் அதை எதிர்பார்க்கிறேன். ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என நீதிமன்றம் அறிவித்துவிட்டதால் அதிமுக ஓபிஎஸ்ஸுக்குத்தான் என்று அர்த்தம் இல்லை.

ஓபிஎஸ் அதிமுகவை மறந்துவிட வேண்டியதுதான்
ஓபிஎஸ் இப்போது இருக்கும் நிலையில் நிர்வாகிகளின் ஒத்துழைப்பின்றி ஒரு வார்டு கவுன்சிலராக கூட நின்று வெற்றி பெற முடியாத நிலை இருக்கிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என தீர்ப்பு வந்துள்ளது. இது பெரிய போஸ்ட்தான், இதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் உண்மை நிலை என்ன? கட்சிக்காரர்கள் ஓபிஎஸ்ஸை விரும்புகிறார்களா? என்றால் இல்லை, எனவே ஓபிஎஸ்ஸுக்கு என்னதான் கை ஓங்கினாலும் அவர் அதிமுகவை மறந்துவிட வேண்டியதுதான் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications