கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து.. ஹிட்லர் பழனிசாமி! எங்களை பார்க்கவே பயம்.. டிடிவி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொண்டது போல் எடப்பாடி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார் எனவும், எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது என அமமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர்," செங்கோட்டையன் அவர்கள் 72ல் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கட்சியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

TTV Dhinakaran edappadi palaniswami Sengottaiyan

அதிமுக மோதல்

அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் அவர்கள் பசும்பொன்னில் தாங்களை சந்தித்தது அரசியல் ரீதியான நிகழ்ச்சி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைலி ஜெயலலிதா பசும்பொன் வரும்போது எல்லாம் செங்கோட்டையன் அம்மாவின் பாதுகாப்பிற்காக கட்சி சார்பாக அங்கு வருவார். அம்மாவின் அரசியல் சுற்றுப்பயணத்தின் பாதுகாப்பில் செங்கோட்டையன் முக்கிய பங்கு ஆற்றியவர். நாங்கள் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை,

டிடிவி தினகரன்

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் செங்கோட்டையன் சொன்னார். கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்தது இருப்பது போல எடப்பாடி பழனிச்சாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல தற்போது கட்சியை சின்னா பின்னம் ஆக்கி வருகிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிச்சாமி வழி வகுக்கிறார். மற்றவர்களை பார்த்து துரோகி என கூறும் தகுதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

சசிகலா ஓபிஎஸ்

கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொண்டது போல் எடப்பாடி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கிய சின்னம்மா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய பழனிச்சாமி துரோகியா? அவர் முதல்வராக அவருக்கு ஆதரவு வழங்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? நாங்கள் துரோகியா?

செங்கோட்டையன் நீக்கம்

ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ள பழனிச்சாமி. துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். எங்களோடு ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜைக்கு வந்ததால் கட்சியிலிருந்து கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையன் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிச்சாமிக்கு தென் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி

தென் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். எங்களை b-team என்று சொல்லும் பழனிச்சாமி தான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமானவர். இந்த தேர்தலில் பழனிச்சாமியின் துரோகம் வீழ்த்தப்படும். கொடைநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிச்சாமி பதறுவார். பதறுகிறார்.. அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள் கடைசியில் சூரசம்ஹாரம் நடக்கும்.

விஜய்

எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு நாங்கள் ஜனநாயக முறையில் எடுக்கப் போகும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள்" என்றார். எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு ஆயுதமாக விஜயை கையில் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு? போர்க்களத்தில் தான் ஆயுதத்தை எடுக்க முடியும் அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து, தேர்தலில் பாருங்கள்" என டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+