EPS Delhi Visit: எடப்பாடிக்கு போனைப் போட்ட அமித்ஷா.. அவசரமாய் டெல்லி போனது இதுக்காக தானா? ஆனாலும் ஒரு ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்று இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்கவில்லை என்றாலும், கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக அறிவுறுத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் முடியவே முடியாது என விடாப்பிடியாய் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பாஜக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2021 மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவான நிலையில், அண்ணாமலையின் செயல்பாடுகளால் கூட்டணி உடைந்தது.

தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனி அணியாக களம் கண்டன. கிட்டதட்ட அனைத்து தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளும், இரண்டாம் இடம் பெற்றது. சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.

EPS Delhi Visit

பாஜக - அதிமுக

இதை அடுத்து இரு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால் கணிசமான தொகுதிகளை வென்றிருக்க முடியும் என்ற குரல் எழுந்தது. இதை அடுத்து அதிமுக சீனியர்களின் பேச்சுக்கு இணங்க அதிமுக பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். ஆனால் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் கோரிக்கை.

தேசிய ஜனநாயக கூட்டணி

அண்ணாமலை குறித்த முதல் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது கோரிக்கை குறித்து பிறகு பரிசீலிக்கலாம் என பாஜக கூறியிருந்தது. இந்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணி அமைந்த பிறகு தங்களை மதிக்கவில்லை உரிய முக்கியத்துவம் தரவில்லை எனக் கூறிய டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டனர். நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன் வைத்தார். மேலும் பிரதமர் மோடியை சந்திக்க தனக்கு உதவவில்லை என நயினார் மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

நயினார் நாகேந்திரன்

இதனால் நயினார் நாகேந்திரனுக்கும் டிடிவி தினகரன் இடையே வார்த்தை போர் வெடித்திருக்கிறது. இதற்கு இடையே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கூறி போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு டெல்லிக்குச் சென்ற அவர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

எடப்பாடி டெல்லி பயணம்

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்றும் நாளையும் தர்மபுரியில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அதனை ரத்து செய்துவிட்டு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். குடியரசு துணைத் தலைவராக இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து தேநீர் விருந்தில் கலந்து கொள்வார் எடப்பாடி என கூறப்பட்டாலும், அமித்ஷாவை சந்திப்பதுதான் முக்கிய திட்டம் என்கின்றனர்.

அமித்ஷா

இந்த நிலையில் எடப்பாடியின் டெல்லி பயணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் பலமான கூட்டணி அமைய வேண்டியது அவசியம். அதற்காக அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சில கட்சிகளை ஓரணியில் திரட்டுவது என்பதுதான் பாஜகவின் திட்டம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் டிடிவி சேர்த்துக்கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார். கட்சியில் சேர்க்கவில்லை என்றாலும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அது தொடர்பாகவே அமித்ஷா எடப்பாடி இடம் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் டிடிவி தினகரன்

ஆனால் கட்சியிலும் இல்லை கூட்டணியிலும் ஓபிஎஸ் டிடிவி தினகரனுக்கு இடமில்லை என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டவட்டமான எண்ணம். அதனை பாஜக தலைமையிடம் வெளிப்படையாக சொல்லிவிடுவது என்று தான் டெல்லி புறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில்தான் நேற்று அவர் அதிமுக கூட்டத்தில் துரோகிகள், கைக்கூலிகள் என ஓபிஎஸ் டிடிவி செங்கோட்டையினை விமர்சித்ததாக சொல்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+