பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா.. விமான நிலையத்துக்கு பெயர்! எடப்பாடி திடீர் கோரிக்கை!
திண்டுக்கல்: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா விருது வழங்கி, மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயரை சூட்ட வேண்டுமென கோரிக்கை விடுப்போம் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
முதலில் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பேசிய அவர்," திமுக ஆட்சி அமைந்து 52 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது என்றாலும், இந்த ஆட்சியில் இந்த தொகுதிக்கு எந்த பெரிய திட்டமும் கொடுக்கவில்லை. இங்கு அமைச்சரும் இருக்கிறார் என்றாலும் திண்டுக்கல் மாவட்டத்துக்கே எந்த திட்டமும் கொடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
இதுவே அதிமுக ஆட்சியில் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 350 கோடி ரூபாயில் அமைத்துக் கொடுத்தோம். உயர்தர அறுவை சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு வசதி நிறைந்தது. நான் முதல்வராக இருந்தபோது சிறப்பான சிகிச்சை அளிக்க நிதி எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அமைத்துக் கொடுத்தேன். இப்படி ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை இங்கிருக்கும் அமைச்சர் கொடுத்திருக்கிறாரா?
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தனது சொத்தின் ஒரு பகுதியை ஜாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டு வென்றவர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை வைப்போம், அதற்கான முயற்சி எடுப்போம். தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்துகாட்டிய தேவர் பெருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை சிலபேர் கடுமையாக தாக்கினார்கள். அதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. டிஜிபி அலுவலகம் முன்பே ஒருவர் தாக்கப்படுகிறார் என்றால் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று பாருங்கள். ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவர் மீது வெடிகுண்டு வீசினார்கள். அவர் கழிவறைக்குச் சென்று உயிர் தப்பியிருக்கிறார். அவருடன் இருந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நகை திருட்டு
இன்று தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை. பட்டப்பகலில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசுகிறார்கள் என்று சொன்னால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா? திமுகவைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் பேருந்து பயணத்தில் ஒருவரிடமிருந்து 4 பவுன் நகை திருடியிருக்கிறார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. திமுகவின் யோக்கியதை என்னவென்று எண்ணிப்பாருங்கள். திருட்டு வழக்கில் இருப்பவரைத் தேர்வு செய்யும் நிலை திமுகவில் இருக்கிறது.
தமிழக அரசியல்
அதனால்தான் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஊராட்சி மன்றத் தலைவரே திருடுகிறார் என்றால் கீழே இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்? போதைப்பொருள் தமிழகத்தில் தாராளமாகக் கிடைக்கிறது. கஞ்சா சாக்லேட் ரூபத்தில் கிடைக்கிறது. நான் பலமுறை எச்சரித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம். ஆனால் இன்று முதல்வர், போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று சொல்கிறார்.
போதைப்பொருள் பிரச்சனை
எப்போது? எல்லோரும் சீரழிந்த பின்னர் இப்போதுதான் ஞானோதயம் வந்து அறிவுரை கூறுகிறார். இப்படிப்பட்ட பொம்மை முதல்வர் தேவையா? சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் இப்படிப்பட்ட சம்பவம் தொடர்கதையாகிறது. இங்கிருக்கும் அமைச்சர் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர். ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் நிதியை எடுத்து வேறு வேலைக்குப் பயன்படுத்துகிறார். எப்படி ஊராட்சி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைச் செய்ய முடியும்? இது மக்களை வஞ்சிக்கும் செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்த அரசும் உள்ளாட்சி நிதியை வேறு பணிக்குச் செயல்படுத்தியது கிடையாது, ஆனால் திமுக அரசு செய்கிறது." என்றார்.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர்












Click it and Unblock the Notifications