நீட் பயம்..உயிரை இழந்த இந்துமதி! நீட் ரகசியத்தை உடனே சொல்லுங்க #Daddy_son.. அட்டாக் மோடில் எடப்பாடி
சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீட் ரகசியத்தை உடனடியாக 'டாடி சன்' (உதயநிதி ஸ்டாலின்) சொல்ல வேண்டும் எனவும், இல்லை என்றால் திமுக பொய் சொன்னதை ஒப்புக் கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளான எடப்பாடி பழனிச்சாமி.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரது இரண்டாவது மகள் இந்துமதி கடந்த 2022 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பை முடித்த அவர் 600க்கு 520 மதிப்பெண்கள் பெற்று இருந்தாr.

அவருக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவு. கடந்த ஆண்டு நீட் தேர்வில் அவர் 350 மதிப்பெண்கள் தான் எடுத்துள்ளார். அதனால் அவருக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரண்டாவது முயற்சியாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
மே மாதம் நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தனக்கு ஓபிசி சான்றிதழ் வாங்கி வர வேண்டுமென தந்தையிடம் கூறியிருக்கிறார் தொடர்ந்து அவர் தந்தை சான்றிதழை கொடுத்துவிட்டு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்துமதி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் வீடு திரும்பிய பின்னர்தான் மகள் தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு தெரிய வந்தது. மகளின் உடலை பார்த்து அவர்கள் கதறி துடித்த நிலையில் தகவல் இருந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் கூறினர். இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இப்போதாவது உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரகசியத்தை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில்,

நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா திமுக அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல் , ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
நாடு முழுக்க கேஸ்.. அந்த ஒரு பேச்சுக்காக விடாது துரத்தும் கேஸ்.. உதயநிதி பிரமாண பத்திர சீக்ரெட்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications