“எடப்பாடி மெகா சொதப்பல்.. ஓபிஎஸ்ஸை விட மோசமான நிலைமை வரும்”.. கேசி பழனிசாமி ஆரூடம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் தேர்தல் வியூகங்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி பாராட்டி உள்ளார். "சரியான பாதையில் எடப்பாடி பயணிக்க தவறுகிறார். இன்று OPS க்கு உள்ள நிலைமை, விரைவில் EPS க்கு வரும். அவருடைய நிலைமை இதைவிட மோசமாக இருக்கும்." என அவர் ஆரூடம் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்து தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், தேமுதிக அண்மையில் திமுக கூட்டணியில் இணைந்தது. இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஓபிஎஸ்ஸும் விரைவில் திமுக கூட்டணியில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தவறான வியூகங்களை கையாண்டு வருகிறார் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கிய சரியான பாதையில் அவர் பயணிக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "வருகிற தேர்தலுக்கு வலிமைப்படுத்தப்படும் என்று நினைத்த அதிமுக சரிவை நோக்கி பயணிக்க துவங்குகிறது! மகளிர்க்கு 5000 ரூபாய் + மாதம் 2000 ரூபாய் என எடப்பாடி முந்திக்கொண்டு அறிவித்தது தவறு. மாறாக அதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கலாம்.
முன்கூட்டியே அறிவித்ததன் விளைவு, ஸ்டாலின் சுதாரித்துக் கொண்டு இப்பொழுதே அதை கொடுத்து விட்டார், இது ஒரு பலவீனம். அதனால் பலனடைந்தவர்கள் வாக்கு தொகுதிக்கு சுமார் 10,000 திமுகவுக்கு கிடைக்கும்.
NDA கூட்டணிக்கு வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக சென்றது திமுகவுக்கு பலம் சேர்க்கிறதோ இல்லையோ, அதிமுகவை பலவீனப்படுத்துகிறது, தொண்டர்களை சோர்வடைய செய்கிறது.
குறைந்தபட்சம் கூட்டணியிலாவது அனைவரும் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஓபி.எஸ்-ன் திமுகவை நோக்கிய நகர்வு திமுகவுக்கு பலமுமோ இல்லையோ பொதுமக்கள் பார்வையில் அதிமுகவுக்கு பலவீனத்தை உண்டாக்குகிறது.
இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒருங்கிணைப்புக் குழு அமைத்து நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்று சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த இயக்கம் ஒன்றுபடுத்தப்பட வேண்டும் என்று கூறிய எனக்கு கொடுக்கப்பட்ட பட்டம் "தெருவில் போகிறவர்கள்" என்பது. இதையெல்லாம் தாண்டி ஏதேனும் ஒரு நல்லது நடந்து விடாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்தால் சரியான பாதையில் எடப்பாடி பயணிக்க தவறுகிறார் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் சரி செய்து எல்லோரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து கட்சியை வலிமைப்படுத்துகிற பணியை செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியே திமுகவை விட்டு தவெக பக்கம் சென்றாலும் அதிமுக மோசமான எதிர் விளைவுகளை மட்டுமே எதிர்நோக்க வேண்டி இருக்கும்.
இன்று OPS க்கு உள்ள நிலைமை, விரைவில் EPS க்கு வரும். அவருடைய நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். அதிமுக தொண்டர்கள், இதனை புரிந்து கொள்ளும் நாள், வெகு தொலைவில் இல்லை. இபிஎஸ் அவர்களே, நீங்கள் அதிமுகவுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்." எனத் தெரிவித்துள்ளார்,
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்











Click it and Unblock the Notifications