“பூமராங்”- எடப்பாடிக்கே எதிராக திரும்பிய அவரது “லெட்டர்”.. போச்சா? பன்னீரே எதிர்பார்க்காத “டுவிஸ்ட்”
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதம் தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

புதிய உத்தரவு
ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் பழைய நிலை
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

எடப்பாடிக்கு சிக்கல்
இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பிரமாண பத்திரம் தற்போது அவருக்கு எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரமாண பத்திரம்
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பிரமாண பத்திரத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால், தான் வகிக்கும் இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் பதவிகளை அதிமுக பதிவு ஆவணங்களில் அகற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டாராம்.

பதவி போகும் வாய்ப்பு
எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரமாண பத்திரம் பதவியை ராஜினாமா செய்வதற்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்று செயல்படுத்தி இருந்தால் எடப்பாடி பழனிசாமி கட்சியின் உறுப்பினராக மட்டுமே தொடர முடியும். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ஈபிஎஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் சொல்லி அதை திரும்பப்பெற முயற்சித்து வருகிறாராம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications