வேட்டிய மடிச்சு.. இப்ப என்ன இப்படி? ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏவுக்கு சப்போர்ட்டாக வந்த எடப்பாடி டீம்! ஆஹா!
சென்னை : ஓபிஎஸ் - எடப்பாடி அணி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கீரியும், பாம்புமாகச் செயல்பட்டு வரும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி பதில் நேரத்தின் போது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பனுக்கு ஆதரவாக, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குரல் கொடுத்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தனது தொகுதிக்குட்பட்ட 58 கிராம கால்வாயில், புதூர் முதல் புள்ளிமான் கொம்பு வரை சிமென்ட் கால்வாயாகத் தரம் உயர்த்தித் தரப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.

மாஸ்டர் பிளான் : அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டம் அது. பக்கத்தில் வைகை ஆறு ஓடினாலும், உசிலம்பட்டி வறட்சியான தொகுதியாகத்தான் உள்ளது. அதனை மனதில் வைத்துத்தான் கருணாநிதி, மாஸ்டர் பிளான் போட்டு, வைகை ஆற்றின் உபரி நீரை 58 கிராம கால்வாய்கள் அமைத்துக் கொண்டு செல்வது என்று முடிவு செய்தார். கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தைக் கண்ணின் மணிபோலக் காப்போம். இந்த கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றினால் நீரின் ஓதம் மற்ற இடங்களுக்கு பரவாது அதனால் கால்வாய் பழுதுள்ள இடங்களில் மட்டும் சிமெண்ட் கால்வாய் அமைத்து சீர் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக சீனிவாசன் : இதனையடுத்து பேசிய அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் கேட்டிருப்பது மக்களுக்கான கோரிக்கை. அதனால் அதனைச் செய்து கொடுக்க வேண்டும். சிமென்ட் கால்வாய் அமைக்க முடியாது என அமைச்சர் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக ஆட்சியில் அந்த திட்டம் தொடங்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. இதில் எங்கள் சாதனையும் உள்ளது என்றார்.
ஓபிஎஸ் பேச்சு : இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "இந்த விவகாரம் தொடர்பாக அரசாணை நிறைவேற்றி, 58 கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இந்த கால்வாய்க்கு வைகை அணை நிரம்பும் போதும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பினால் தான் தண்ணீர் திறக்கும் வகையில் அரசாணை உள்ளது. மிகப்பெரிய பேய் மழை பெய்தால் தான் வைகை அணையும் ராமநாதபுரம் பெரிய கண்மாயும் நிரம்பும். அதனால் அந்த அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

அன்று மோதல் - இன்று ஆதரவு : அண்மையில், சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக என பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பினர். அப்போது, அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமிக்கும், மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருக்கையிலிருந்து எழுந்த மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ-க்களை நோக்கிப் பாய்ந்துகொண்டு சென்றார்.
உடனே ஓ.பன்னீர்செல்லம் அவர் கையைப் பிடித்து இழுத்து தடுத்தார். இதனால் சட்டசபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சட்டமன்றத்திலும் அதிமுகவின் இரு அணி எம்.எல்.ஏக்களும் மோதிக்கொண்ட நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏ பேசியது எம்எல் ஏக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications