Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணிக்கு நோ சொன்ன விஜய்.. அமித்ஷாவால் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி.. கணக்கை மாற்றும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணி அமையாததால், மத்திய அமைச்சர் அமித்ஷா மீது எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் விவகாரத்திற்கு பின் விஜய் கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமித்ஷா குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட உத்தரவாதம் காரணமாகவே தவெகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பிரம்மாண்ட கட்சி ஒன்று இணையப் போவதாக எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். ஒரு கட்டத்தில் அதிமுக பிரச்சாரத்திலேயே, தவெக கொடியை பார்த்து கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க என்று உற்சாகம் அடைந்தார்.

EPS - Vijay

இதனால் அதிமுக 2ஆம் கட்டத் தலைவர்களும் அதிமுக கூட்டணிக்குள் தவெக வரப் போவதாக நம்பினர். பாஜக கூட்டணி அமைவதற்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்பியது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த சூழலில், விஜய் தரப்பு முன் வைத்த டிமாண்ட் மிகப்பெரிதாக இருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி பின் வாங்கினார்.

எடப்பாடி பழனிசாமியின் டீம் நேரடியாக அணுகிய போதே விஜய் பிடி கொடுக்கவில்லை. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின், எடப்பாடி பழனிசாமி விஜய் பற்றி சிந்திக்கவே இல்லை. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் அதிமுக பக்கம் வருவார் என்று பாஜக மேலிடத்திற்கு நெருக்கமான வட்டாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கூறி இருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் பாஜகவுக்காக கருத்துக் கணிப்புகளை எடுக்கக் கூடிய ஒரு குழுவின் தலைமை, எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லியதாக தெரிகிறது. இதன் காரணமாக சட்டசபைத் தொடங்கி ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தவெகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் பேசி தொடங்கி இருக்கின்றனர்.

அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், அவருக்கு 40 முதல் 50 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும். அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது வரை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஆனால் தவெகவின் சிறப்பு பொதுக்குழுவை விஜய் கூட்டிய பின், எடப்பாடி பழனிசாமிக்கு முழு விவகாரமும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே தேவர் ஜெயந்தி நாளன்றே அதிமுக - தவெக இடையில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி முந்திக் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார். இதன்பின் தவெக சிறப்பு பொதுக்குழு விஜய் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பின், எடப்பாடி பழனிசாமி அப்செட்டாகி இருக்கிறார்.

இருந்தாலும் விஜய்யின் அரசியல் வருகையை வைத்து எடப்பாடி பழனிசாமி லாபக் கணக்கை போட்டு வைத்திருக்கிறார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பலரும் விஜய் பக்கம் செல்வார்கள் என்று கணித்திருக்கிறார். அப்படி சென்றால் கடைசி நேரத்தில் நிச்சயம் கணக்குகள் மாறும் என்றும், அதிமுகவின் தேர்தல் பணிகள் மக்கள் மத்தியில் எடுபடும் என்று நம்பிக்கையுடன் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+