20 லட்சம் எட்டியாச்சு.. விரைவில் 1 கோடியை எட்டுவோம்.. சமக்கல்வி கையெழுத்து குறித்து அண்ணாமலை அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்துக் குழந்தைகளுக்கு சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக பாஜக சார்பில், சமக்கல்வி கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்தில் 20 லட்சம் இலக்கை எட்டியிருப்பதாகவும், விரைவில் 1 கோடி என்ற இலக்கை எட்டுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றினால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், புதிய கல்விக் கொள்கை மூலம் ஒருபோதும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்றும் அரசியல் கட்சியினர் அந்தக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

BJP Annamalai Equal education Signature campign

இதைத்தொடர்ந்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மார்ச் 5 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். சமக்கல்வி இணையதளம் மற்றும் சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ''இந்த கையெழுத்து இயக்கம் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை பட்டிதொட்டி எங்கும் மக்களிடம் கொண்டு சென்று, ஒரு கோடி கையெழுத்து பெற்று, மே இறுதிக்குள் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக மக்களின் குரலாக அதை வழங்கவுள்ளோம். 1965 திமுகவுக்கானது என்றால், 2025 பாஜகவுக்கானது'' என்றார்.

இந்நிலையில், இந்த கையெழுத்து இயக்கத்தில் 20 லட்சம் இலக்கை எட்டியிருப்பதாகவும், விரைவில் 1 கோடி என்ற இலக்கை எட்டுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வித்தியாசமின்றி, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக பாஜக சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தது.

ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு வைத்துத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தமிழக மக்கள் பேராதரவுடன், களத்திலும், இணைய தளம் வழியாகவும் சேர்த்து, 20 லட்சம் என்ற இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக மக்கள் அன்புடனும் ஆதரவுடனும், விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். சமக்கல்வியான மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம்". என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+