சம ஊதியம் கொடுங்க.. சென்னையில் 7-வது நாளாக போராடிய இடைநிலை ஆசிரியர்கள் கைது!
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது வாக்குறுதியில், சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்ற கூறியிருந்ததாகவும், ஆனால் தற்போது ஆட்சியே முடியப்போகிறது.. எனினும் இப்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் உடனே இந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கோரி கடந்த 26 ஆம் தேதி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி
தேர்தல் வாக்குறுதி 311 ஆக இந்த வாக்குறுதியை திமுக அளித்திருந்ததாகவும், இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. முதல் நாள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் போராட்டத்தை தொடங்கினர். 11 மணியளவில் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் கூடிய இடைநிலை ஆசிரியர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பதாகைகளுடன் முழக்கமிட்ட அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களாக நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்ததால் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் தரையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை தரதரவென இழுத்துச் சென்ற நிகழ்வும் நடைபெற்றது.
கடந்த 30 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசாருடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்து கோஷமும் எழுப்பினர். இதில் சில ஆசிரியைகள் மயக்கமும் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
7-வது நாளாக போராட்டம்
ஆனால் 6 நாட்கள் ஆகியும் இதுவரை அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனினும் ஆசிரியர்கள் கூறுகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் புத்தாண்டான இன்றும் 7 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணி முதல் நூற்றுக்கும் மேலான ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கொடு என்ற பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்தனர். போலீசாரும் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்
அப்போது இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில், இதுவரை அரசு தரப்பில் இருந்து எங்களிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வரும் 5 ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். இப்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு இன்றி இந்த போராட்டமானது நடத்தப்படுகிறது.
அரசு விரைவில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும் எங்களது போராட்டம் தொடரும்" என்று கூறினர். மேலும் அவர்கள் கூறுகையில், 2009 ஆம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8,370 ரூபாயும், அதே ஆண்டு ஜூன் 1 அன்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்திற்கும் மேல் வேறுபடுகிறது
ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை சம்பளம் 3 ஆயிரத்திற்கும் மேல் வேறுபடுகிறது. ஒரே வேலை, ஒரே தகுதி இருந்தும் சம்பள வித்தியாசம் 16 ஆயிரம் வரை ஏற்பட்டுள்ளது. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடுவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications