பூஜை எதிர்ப்பு சர்ச்சை... செந்தில்குமார் போட்ட ட்வீட் - கேரளாவில் பற்றி எரிகிறதாம்.. விரைவில்?
சென்னை: தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் அரசு நிகழ்ச்சியில் பூஜை நடத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது கேரளாவிலும் பற்றி எரிவதாகவும், விரைவில் நாடு முழுவதும் இது பரவும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது.
இதற்கு துறை சார்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பணியை தொடங்கி வைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பூமி பூஜைக்கு எதிர்ப்பு
இந்த விழாவில் கலந்துகொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் இந்து முறைபடி பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். இந்து புரோகிதர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய இமாம்கள், கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் என்று கூறினார்.
|
வைரலான வீடியோ
இது திராவிட மாடல் அரசு என்று தெரிவித்த செந்தில்குமார், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தன்னை அழைக்க வேண்டாம் என்று கூறி பூஜையை நிறுத்திவிட்டு பணியை தொடங்கி வைத்தார். செந்தில்குமார் அதிகாரிகளை கண்டிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவும் எதிர்ப்பு
ஒரு பக்கம் செந்தில்குமாரின் செயல்பாட்டை ஆதரித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக ஆதரவாளர்கள், திராவிட, இடதுசாரி சிந்தனையாளர்களும் சமூக வலைதளங்களில் செந்தில்குமாரை பாராட்டி வருகின்றனர். அதேநேரம் பாஜக பிரமுகர்கள், இந்துத்துவா அமைப்பினர்கள் செந்தில்குமாரை கண்டித்து வருகின்றனர். பல இடங்களிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

செந்தில்குமார் ட்வீட்
அவர் மீது திமுக தலைமை அதிருப்தி அடைந்து இருப்பதாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், செந்தில்குமார் எம்.பி. தொடர்ந்து அது தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மலையாள ஊடகத்தில் செந்தில்குமாரின் வீடியோ வெளியானது. இதனை ட்விட்டரில் பகிர்ந்த செந்தில்குமார், "இங்கு பற்ற வைத்த பகுத்தறிவு சமத்துவ தீப்பொறி இப்பொழுது கேரளாவில் பற்றி எரிகிறது. விரைவில் இந்தியா முழுவதும்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications