திமுகவுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு! ஸ்டாலினிடம் கடிதம் அளித்த எர்ணாவூர் நாராயணன்!
சென்னை: எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு தான் என அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கழகத்தின் ஆதரவு கடிதத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார் நாராயணன். இவர் தற்போது பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக உள்ளார். திமுகவை பொறுத்தவரை கடந்த சட்டசபைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருப்பதாகவும் அதேபோல் வகுத்த திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது எனவும் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சமத்துவ மக்கள் கழகத்திற்கு வாரியப் பதவி தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார், அதே போல் சொன்னதை செய்தார் எனத் தெரிவித்தார். அது போல பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பதவியைத் தனக்கு தந்தார் எனவும் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறிய எர்ணாவூர் நாராயணன். தமிழக அரசு தான் மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியதாக தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை பொறுத்தவரை கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் நாங்குநேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த இவருக்கு கூட்டணி அடிப்படையில் சீட் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினார் ஜெயலலிதா. அதன் பிறகு சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வரும் இவர் திமுகவுடன் ஐக்கியமானார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் 1 சீட் கேட்ட இவருக்கு, வெற்றி பெற்றால் வாரியத் தலைவராக்குகிறோம் என உறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதன்படி அந்த உறுதியை நிறைவேற்றிவிட்டார்.
இப்போது தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக இருக்கும் இவர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார். தூத்துக்குடி, நெல்லை, வட சென்னை மாவட்டங்களில் ஓரளவு நாடார் சமுதாய வாக்குவங்கியை வைத்துள்ளார். இதன் காரணமாக இவரையும் அனுசரித்துச் செல்கிறது திமுக தலைமை.
-
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications