ரெய்டு நடந்து 3 நாள்.. ஈரோடு தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் மாற்றம்.. இனி கோவை துணை ஆணையர்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், கோவை மாநகராட்சி துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சிவக்குமாரின் சென்னை மற்றும் ஈரோடு வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்திருந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் அதிகாரியாக செயல்பட்டார். இவருக்கு ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றுவதற்கு முன், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், பல்லவபுரம் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
பல்லவரபும் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்களில் சிக்கியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன.

இதனிடையே பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் மூன்று நாட்களுக்கு முன் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள சிவக்குமார் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த சிவக்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த சிவக்குமார், கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெற்றிருந்த சூழலில், அடுத்த சில நாட்களில் சிவக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications