டெபாசிட்டே போயிருக்கு..ஆனால் பொதுத்தேர்தலில் ரிசல்ட் மாறியிருக்குங்க..பாயிண்ட் பிடித்த செல்லூர் ராஜூ
ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்தது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
சென்னை: திருமங்கலம், பென்னகரம் தொகுதியில் டெபாசிட் இழந்த போதும் கூட அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே இந்த இடைத்தேர்தலை வைத்து கணிக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதிமுக படு தோல்வி அடைந்தது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலம் பகுதியில் அக்கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, . இதைக்காட்டிலும் மோசமான தோல்வியை பார்த்து இருக்கிறோம். மிகப்பெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறோம். வெற்றியைக் கண்டும் ஆடுவது கிடையாது. தோல்வியைக் கண்டும் துவண்டு போவதும் கிடையாது என்று கூறினார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ மேலும் கூறியதாவது:-

பணநாயகம் தான் வென்று இருக்கிறது
ஈரோடு கிழக்கு தொகுதியில் முடிவுகள் பற்றிய பதிலை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சொல்லிவிட்டார். இடைத்தேர்தல் என்பது பணநாயகம் தான் வென்று இருக்கிறது. ஜனநாயகம் வென்றது இல்லை என்று ஆளும் கட்சி தான் முறைகேடு செய்து வெற்றி பெறும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவனே முன்பு ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அதிமுகவை பார்த்து முதல்வரும் அமைச்சர்களும் எந்த அளவுக்கு பயந்தார்கள் என்பதற்கு ஈரொடு கிழக்கு தொகுதி தேர்தல் ஒரு எடுத்துக் காட்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பணத்தை வாரி இறைத்து
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் ஏறத்தாழ 28 நாட்கள் 30 அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டனர். 30 இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்களை ஆடு மாடு போல அடைத்து பணத்தை கொடுத்தனர். பணத்தை வாரி இறைத்து வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு திமுகவின் ஆட்சி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டது.

திருமங்கலம் பார்முலா முறியடிப்பு
அதிகாரிகள் யாருமே வரவில்லை. இதுவரை திமுகவிற்கு இருந்த பெருமை திருமங்கலம் பார்முலா.. அதை எல்லாம் முறியடித்து விட்டு இன்று ஈரோடு கிழக்கு தொகுதி என்ர பார்முலா கொண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக கொண்டாடும் அளவிற்கான வெற்றி இது இல்லை. நாங்கள் கவலைப்படுவதற்கும் ஒன்றும் இல்லை.

ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்தது
இதைக்காட்டிலும் மோசமான தோல்வியை பார்த்து இருக்கிறோம்.மிகப்பெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறோம். வெற்றியைக் கண்டும் ஆடுவது கிடையாது. தோல்வியைக் கண்டும் துவண்டு போவது கிடையாது. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக துணை போனது. ஓபிஎஸ்கூறிய கருத்துக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமி பதில் கொடுப்பார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று அவருக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு குறையவில்லை. ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்தது. பிறகு ஆட்சிக்கு வந்தார்கள்.

பென்னகரம் தொகுதியில் டெபாசிட் இழந்தோம்
திருமங்கலம் தொகுதியில் எங்களுக்கு டெபாசிட் போனது. திமுக அமோக வெற்றி பெற்றது. 2010 தேர்தலில் தோல்வி அடைந்தோம். 2011 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதே தொகுதியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். பென்னகரம் தொகுதியில் டெபாசிட் இழந்தோம். பொதுத்தேர்தலில் 50 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றோம். எனவே இது ஒரு கணிப்பு கிடையாது. திமுக கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை. மக்கள் மனநிலை எப்படி இருந்தது என்று அங்கு தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications