களத்துல சந்திப்போம்.. விடாப்பிடி எடப்பாடி! மல்லுகட்டும் ஓபிஎஸ்.. மீண்டும் பருத்தி மூட்டை குடோன் கதை!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலிலும் சிக்கல் முளைத்திருக்கிறது. ஓபிஎஸ்ஐ சேர்த்துக் கொள்ள மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுப்பதால் ஓபிஎஸ் களத்தில் குதிக்க போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் அதிமுக தொண்டர்களுக்கு பாதிப்பு என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் இபிஎஸ் இடையிலான அதிகார மோதல் ஏற்கனவே சொன்னது போலவே நாடாளுமன்ற தேர்தல் வரை முடியாது போல. இந்த விவகாரத்தையும் முடித்து விட்டால் எதை வைத்து அரசியல் செய்வது என இரு தரப்பினரும் நினைப்பார்கள் போல.
காரணம் தற்போது அக்னி பரிட்சையாய் அதிமுகவுக்கு முன் நிற்கிறது ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். தமிழகத்தின் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை நிரூபிப்பதற்கான அற்புத தருணமாக இதை அதிமுக கருதுகிறது.

அதிமுக மோதல்
ஆனால் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. ஆளும் கட்சியையோ அல்லது அதன் கூட்டணி கட்சியையோ இடைத்தேர்தலில் ஜெயிப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஜெயலலிதா இருந்த போதும் கருணாநிதி இருந்த போதும் ஆளும் கட்சியிடம் எதிர்க்கட்சி தோற்றது தான் வரலாறு. மாறாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக டிடிவி தினகரன் ஜெயித்தது வேறு கதை. இந்த நிலையில் தற்போதைய சூழலில் ஆளும்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஈரோடு தொகுதியை கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒதுக்கி உள்ளது. இதனால் திமுக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக நிலைப்பாடு
அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு யூகங்கள் வெளியான நிலையில் அதிமுகவே போட்டியிடும் என ஜிகே வாசன் விட்டுக் கொடுத்தார். இதனால் தேர்தலில் போட்டியிட எடப்பாடி தரப்பு தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓபிஎஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நாங்களும் தேர்தலில் போட்டியிடுவோம் எங்களுக்கும் இரட்டை இலை சின்னம் சொந்தம் தான் என அறிவித்திருப்பது எடப்பாடி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கையெழுத்து வேண்டுமே!
ஏற்கனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. ஒருவேளை எடப்பாடி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்தாலும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட வேண்டும்.

சின்னம் முடக்கம்
இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட முடியுமா என்பது மிகவும் சிக்கலாகவே இருக்கிறது. இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் கோரி கடிதம் அளித்தால் நிச்சயம் சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் இரு தரப்புமே வேறு வேறு சின்னங்களில் தான் போட்டியிட வேண்டிய நிலை இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல அதிமுகவின் முதலாளி இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாஜக ஆதரவு
இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் குறிப்பிட தகுந்த வாக்குகளை பெற முடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படி அடுத்தடுத்த சிக்கல்கள் வரும் நிலையில் ஓபிஎஸ் பாஜக ஆதரவு கேட்டால் தர தயார் எனவும் கூறியிருக்கிறார். பாஜக தலைமை இதுவரை தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பது குறித்து உறுதியான முடிவெடுக்காத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முதலாக பாஜகவுக்கு ஆதரவு தருகிறேன் எனக் கூறியிருப்பதும் உற்று நோக்கத்தக்கது.

தொண்டர்கள் அதிருப்தி
இப்படி எடுத்த எடுப்பிலேயே அதிமுகவிற்குள் மோதல் வந்துள்ளது அந்த கட்சி தொண்டர்களை தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எது எப்படி எனினும் இரு தரப்புமே தேர்தலில் போட்டியிடுவோம் என மல்லு கட்டுவதால் பாதிக்கப்படுவதெனவோ தொண்டர்கள்தான். எம்ஜிஆர் ஜெயலலிதா வளர்த்துக் கொடுத்த கட்சி தற்போது இருவரின் அதிகார மோதலால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த கட்சிகள் கூட தங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதியாக கூறிவரும் நிலையில் பல தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications