நீங்க போட்டியிட முடியாது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி.. காரணம் என்ன?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று அவரது வேட்புமனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் இறந்தார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திருமகன் ஈவெராவின் தந்தையான இவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார்.
இந்த தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கேஎஸ் தென்னரசு, ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அமமுக சார்பில் சிவபிரசாந்த், உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வேட்புமனுத்தாக்கல்
இவர்கள் அனைவரும் வேட்மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 1ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பரிசீலனை செய்தார். வேட்புமனுக்களில் உள்ள தகவல்கள், இணைப்பு படிவங்கள், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவம், முன்மொழிவோரின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.

ஓபிஎஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி
மொத்தம் 121 மனுக்கள் செய்யப்பட்ட நிலையில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகனின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனுவில் அதிமுக என குறிப்பிட்டு இருந்த நிலையில் அதுதொடர்பான ஏ, பி படிவங்களை அவர் இணைக்கவில்லை. மேலும் முன்மொழிந்தவர்களின் விபரங்களிலும் குழப்பம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அமமுக வேட்பாளர் மனு ஏற்பு
இருப்பினும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் சீமான் உள்பட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. முன்னதாக அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு மத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவு, இரட்டை இலை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதேபோல் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுகவும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதில் அமமுக வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர் மனுவை வாபஸ் பெற உள்ளார். மாறாக ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வாபஸ் பெற வேண்டியது இல்லை.

நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்
இந்த தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் 191 சின்னங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவும், மார்ச் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications