ஐஆர்சிடிசியில் தட்கல் புக்கிங் செய்யும் போது... இந்த ஒரு தவறு தான் டிக்கெட் கிடைக்காமல் போக காரணம்
சென்னை: ஐஆர்சிடிசி வெப்சைட்டில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்பவர்களில் பலர், ஏன் நம்மால் டிக்கெட் புக்கிங் செய்யவே முடியவில்லை என்று கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. உண்மையில் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போவதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கனோர் மோதுகிறார்கள் அதுதான் காரணம். அதேநேரம் நாம் செய்யும் சில தவறும் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போக காரணம் ஆகும்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான ஐஆர்சிடிசி வெப்சைட்டில் ரயிலில், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கே தனியாக கோர்ஸ் ஆரம்பிக்கலாம். ஏனெனில் அந்த அளவிற்கு தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது என்பது சவாலானது. எல்லாமே சரியாக செய்தாலும் வெப்சைட்டில் பேமெண்ட் மோடு ஒர்க் ஆகாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

முக்கியமான நாட்களில் 10.55க்கு பிறகு ஐஆர்சிடிசி வெப்சைட் உங்கள் லேப்டாப்களிலோ அல்லது மொபைலிலோ லோடு கூட ஆகாது. அப்படியே சுற்றிக்கொண்டே இருக்கும். 11.05 அல்லது 11.10க்கு பிறகே வெப்சைட் ஓபனே ஆகும். அதற்குள் டிக்கெட் முன்பதிவு முடிந்து ரெக்ரட்டிங் என்று வந்துவிடும். அதாவது இதற்கு மேல் முன்பதிவு செய்ய முடியாது என்று வந்துவிடும். தட்கலில் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கும் லிமிட் உள்ளது. அதற்கு மேல் புக்கிங் ஆகாது. அந்த நிலை 11 முதல் 11.03க்கு மேல் வந்துவிடும்..
ஐஆர்சிடிசி தட்கல் சவாலானது: சரி எப்படித்தான் புக்கிங் செய்வது என்று பலருக்கும் குழப்பமும், வருத்தமும் இருக்கும்.. உண்மையில் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போக நீங்கள் காரணம் அல்ல. இது முழுக்க முழுக்க ஐஆர்சிடிசி வெப்சைட்டும், இந்திய ரயில்வேயுமே காரணம் ஆகும். ஏனெனில் மிக குறைந்த அளவு படுக்கை வசதி பெட்டி டிக்கெட்டிற்கு பல லட்சம் பேர் போட்டி போடுகிறார்கள். எனவே டிக்கெட் கிடைப்பது கடும் சவாலானது தான்.
தட்கல் டிக்கெட் சாத்தியமா: எனினும் சில நுட்பங்களை சரியாக கையாள்வதன் மூலம் நமது தரப்பு தவறுகளையும் குறைக்க முடியும். சில தவறுகளை செய்யாமல் இருந்தால் தட்கலில் டிக்கெட் முன்பதிவு 50 சதவீதம் சாத்தியமாகும். மீதமுள்ள 50 சதவீதம் நம் கையில் இல்லை. அதுசரி, என்னென்ன தவறுகளை நாம் தவிர்த்தால் தட்கலில் டிக்கெட் முன்பதிவு எளிதாக இருக்கும்.
தட்கல் டிப்ஸ்: தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர். காலை 10.50க்கு மேலேயே ஐஆர்சிடிசி வெப்சைட்டை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் கடைசி நிமிடங்களில் ஐஆர்சிடிசி வெப்சைட் ஓபன் ஆவது இல்லை. அடுத்ததாக 10.56க்குள் லாக் இன் செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் 10.58க்கு லாக் இன் செய்ய முயற்சித்தால் லோடு ஆகவே மூன்று நிமிடம் எடுத்து 11 மணிக்கு மேல் ஆகிவிடும். 10.57க்குள் எல்லாம் சரியாக செய்து, ரயிலில் போக வேண்டிய இடங்களை தேர்வு செய்து சரியாக 10.59க்குள் டைப் செய்து, எந்த ரயிலோ அதன் அருகில் சரியாக 11 மணிக்கு முன்பே போய்விட வேண்டும்.
கேப்சா தவறுகள்: 11 மணி ஆன உடன், ரயிலில் படுக்கை வசதி பெட்டியை கிளிக் செய்து புக்கிங்கை ஆரம்பித்துவிடுங்கள். அதில் உள்ளே ஏற்கனவே நீங்கள் சேமித்து வைத்த மாஸ்டர் லிஸ்ட் காட்டும். அதில் பெயர்களை செலக்ட் செய்யுங்கள். அனைத்தையும் செய்தால், கீழே ஆட்டோ அப்கிரேட் என்பதை டிக் செய்ய வேண்டும். அத்துடன், புக்கிங் செய்ய வேண்டும் என்பதற்கான அடுத்த கட்டத்தையும் கிளிக் செய்யுங்கள். பிறகு கேப்சா கொடுங்கள், கேப்சாவில் தவறு செய்ய வேண்டாம். ஓடிபி மூலம் உள்ளே சென்றால், சில நேரங்களில் ஓடிபி வர தாமதம் ஆகும். எனவே கேப்சா முறையிலேயே செய்யுங்கள்.
ஐஆர்சிடிசி வாலட்: பேமெண்ட் மோடை பொறுத்தவரை வாலட்களில் பணம் வைத்துக்கொள்வது எளிதாக டிக்கெட் புக்கிங்கிற்கு உதவும். குறிப்பாக ஐஆர்சிடிசி வாலட்டில் வைத்திருந்தால் எளிதாக புக்கிங் செய்யலாம். இல்லாவிட்டால் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ வழியாக முன்பதிவு செய்வது நல்லது. நீங்கள் ஓகே கொடுக்கும் முன்பு தானாகவே வாலட் மற்றும் கார்டு என்று தான் இருக்கும்.
ஐஆர்சிடிசி பேமெண்ட் ஆப்சன்: எனவே அவசரப்பட்டு ஓகே கொடுக்காமல், யுபிஐ மோடு வேண்டும் என்றால், அதனை சரியாக கிளிக் செய்துவிட்டு அதன்பிறகு ஓகே கொடுங்கள். அப்படி கொடுத்தால் நேரடியாக பேமெண்ட் மோடிற்கு செல்லும், பதற்றப்படாமல் எல்லாவற்றையும் சரியாக செய்தால், அதன்பிறகு கூகுள்பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் பணத்தை ஸ்கேன் செய்து அனுப்பலாம். லேப்டாப்பில் டிக்கெட் முன்பதிவு செய்தால், மொபைல் மூலமாக ஸ்கேன் செய்து எளிதாக பேமெண்டை அனுப்பலாம். இல்லை என்றால், கூகுள் பே, போன் பே ஐடிக்களை டைப் செய்து நிரப்ப வேண்டியதிருக்கும். இதில் எந்த தவறும் இல்லை என்றால், பணம் உடனே போய்விடும். தாமதம் இன்றி ,வெறும் 3 நிமிடத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்: அதேநேரம் இணையதள வேகம் நல்ல ஸ்பீடில் இருப்பது அவசியம். இல்லை என்றால், தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம். எல்லாம் சரியாக செய்தால் டிக்கெட் கிடைக்க 50 முதல் 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அதேபோல் முக்கியமான இன்னொரு விஷயம் உள்ளது.. சில ரயில்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும். எனவே எந்த ரயிலுக்கு போட்டி ஓரளவு குறைவாக உள்ளது. எந்த ரயிலில் டிக்கெட் அதிகமாக உள்ளது என்பதை அறிந்து முயற்சி செய்யுங்கள்.. இல்லாவிட்டால் என்ன செய்தாலும் டிக்கெட் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் கிடைப்பது மிகமிக சவாலானது. எனவே இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications