மழை கைவிட்டுவிட்டது! மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பாவம்! நிவாரணம் தரச் சொல்லும் ஈஸ்வரன்!
சென்னை: பருவ மழை பொய்த்த காரணத்தால் மானாவாரி பயிர் செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''இந்த வருடம் கடந்த சில மாதமாக பருவ மழை சரியாக பொழியவில்லை. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தில் பருவமழையை எதிர்பார்த்து விதைக்கப்பட்ட நிலக்கடலை, சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்கள் மழை இல்லாத காரணத்தினால் மிகுந்த விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விதைப்பு செய்யப்பட்ட விதைகளும், முளைத்து வெளியே வந்த பயிர்களும் வாடி கருகி விட்டது. வாடிய பயிர்கள் கால்நடை தீவனத்திற்கு கூட ஆகாத நிலையில் உள்ளது. சென்ற வருடம் பெய்த மழையின் காரணமாக உயர்ந்த நிலத்தடி நீர்மட்டத்தை பயன்படுத்தி ஒருசில இடத்தில், கிணற்று பாசனம் மூலம் ஓரளவு சமாளித்து வருகிறார்கள்.
எனவே பாதிப்பின் விளிம்பில் உள்ள விவசாயிகளை அந்த அந்த மாவட்டங்களில் உரிய முறையில் கணக்கெடுத்து மானாவாரி பயிர் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.''
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications