உயர்கல்வி பொது பாடத்திட்டத்தில் குழப்பம்! முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஈஸ்வரன்! என்ன பின்னணி?
சென்னை: உயர்கல்வி பொது பாடத்திட்டத்தில் பல சந்தேகங்களும், குழப்பங்களும் நிலவுவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் பின்னணியில் தன்னாட்சி கல்லூரி அதிபர்களும், கல்வியாளர்கள் சிலரும் இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனிடையே உயர்கல்வி பொது பாடத்திட்டம் பற்றி ஈஸ்வரன் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் மூலம் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வரையிலும், விதிமுறைகளுக்கு மாறான பல சந்தேகங்களை நீக்கும் வரையிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை தற்போது உள்ளது படியே நீட்டிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
பல்கலைக்கழக மானிய குழுவின் கீழ் இயங்கும் தன்னாட்சி கல்லூரிகளும், மாநில பல்கலைக்கழகங்களும் அவரவர்கள் பாடத்திட்டங்களை அவர்களே மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டிய விதிமுறை உள்ளது. நமது மாநிலத்தில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பம், விவசாயம், கலை மற்றும் அறிவியல் பற்றிய பாடத்திட்டங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதை மேலும் சிறப்பிக்க தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மூலம் பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து குழு அமைத்து பாடத்திட்டங்களை இறுதி செய்யாமல், தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் பாடத்திட்டத்தினை உருவாக்கி கொடுத்து அனைத்து தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் கீழ் இயங்கும் மாநில பல்கலைக்கழகங்களிலும் அமுல்படுத்த கூறி உள்ளது.
இவ்வாறு இருக்க தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கலந்து ஆலோசிக்காமல் அவர்களே ஒரு பாடத்திட்டத்தை இறுதி செய்து அனைத்து தன்னாட்சி அங்கீகாரம் கொண்ட கல்லூரிகளையும், பல்கலைக்கழக மானிய குழுவின் கீழ் இயங்கும் மாநில பல்கலைக்கழகங்களையும் அமல்படுத்த கூறியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மேலும் அவ்வாறு கொடுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் உள்ளதாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் அமைத்துக் கொடுத்துள்ள பாடத்திட்டமானது அவசர காலத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் கோர் சப்ஜெக்டில் உள்ள பாடத்தின் மதிப்பை குறைத்து வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரே ஒரு பாடத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் அறிவியல் சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களில் செய்முறைகளுக்கு உண்டான நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு செய்முறை அறிவியல் சம்பந்தமாக போதிய அறிவு இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

பின்னர் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தினை புதுப்பிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்பதை பற்றி போதிய விதிகள் ஏற்படுத்தப்படாமலும் தற்போது உள்ள விதிகளுக்கு முரணாகவும் உள்ளதாக கூறுகிறார்கள். இது பல குழப்பங்களுக்கு அச்சாரமாக உள்ளது.
எனவே தன்னாட்சி பெற்ற கல்லூரிகளுக்கு தற்பொழுது உள்ள நடைமுறைகளை தொடர அரசு அனுமதி கொடுத்ததின் படியே மற்ற மாநில பல்கலைக்கழகங்களுக்கும் இந்த புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யாமல் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு உண்டான விதிமுறைகளுக்கு உட்பட்டு பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்கள் கல்வித் திறனை மேம்படுத்துவதை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications