வானில் தெரியும் அதிசயம்.. இன்றும் நாளையும் பெய்யும் விண்கல் மழை! தவறவிடாதீங்க
சென்னை: விண்வெளியில் இந்த கோடை காலத்தில் மிக அற்புதமான மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. குறிப்பாக 'எட்டா அக்வாரிட்' விண்கல் மழையை இந்த மாதம் பார்த்து ரசிக்கலாம்.
விண்வெளி நாம் நினைப்பதை விட பெரியது. நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இன்னும் விளக்கமாக சொல்வதெனில், மனிதர்கள் தோன்றிய காலம் தொடங்கி தற்போது வரை விண்வெளியை புரிந்துக்கொள்ள முயன்று வருகின்றனர். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இன்னும் விண்வெளியை நாம் முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை.

சோவியத் ரஷ்யா காலத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர். அது உலகம் முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கும் விண்வெளி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் சாதாரண மக்கள் கூட விண்வெளியை உற்று கவனிக்க தொடங்கியிருக்கின்றனர். இவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக தற்போது விண்வெளியில் 'எட்டா அக்வாரிட்' விண்கல் மழை பொழிய தொடங்கியுள்ளது.
விண்வெளியில் இருக்கும் சிறு, குறு கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் வளிமண்டலத்தில் மோதும் போது அது பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். இந்த காட்சியை பார்ப்பது எரிகல் விழுவதை போன்று தோன்றும். காரிருள் வானிலை சிறிய ஒளிக்கீற்று மிகவும் அழகானதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் இந்த நிகழ்வு நடக்கும். இதுதான் விண்கல் மழை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாதம் 'எட்டா அக்வாரிட்' விண்கல் மழை பொழிந்து வருகிறது. ஹேலி வால் நட்சத்திரம் நமது சூரியனை 75-79 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இப்படி சுற்றி வரும் போது ஏராளமான தூசுகளை விட்டு செல்கிறது. இந்த தூசுகளின் ஒரு பகுதிதான் எட்டா அக்வாரிட் என அழைக்கப்படுகிறது.
இந்த விண்கல் மழையை வெறும் கண்களால் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இதனை பார்க்க முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கிய இந்த விண்கல் மழை, இன்னும் நாளையும் உச்சத்தை எட்டும். இந்த விண்கற்கள் சுமார் 2.38 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும். இந்த வேகத்தில் அந்த கற்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிடும். எனவே பயப்பட தேவையில்லை.
அதேபோல இந்த கண்கொள்ளா காட்சியை ஒளி மாசு குறைவான இடத்திலிருந்து நன்கு பார்க்க முடியும். இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் இதனை தெளிவாக பார்க்க முடியும். இந்தியாவில் பெங்களூரில் இதனை பார்க்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் இருப்பவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள வைனு பப்பு விண்வெளி ஆய்வு மையம் அருகில் ஒளி மாசு குறைவாக இருப்பதால் அங்கிருந்து பார்க்க முயற்சிக்கலாம்.
வானியலை புரிந்துகொள்வதற்கும், மனிதர்கள் உட்பட சகல உயிர்களின் தோற்றம் குறித்த புரிதலுக்கும் விண்வெளி ஆய்வு அவசியமாகும். இந்த ஆய்வுக்கு 'எட்டா அக்வாரிட்' விண்கல் மழையை முக்கியமானது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications