ஆம்பன் புயலே வந்தாலும் இதுதான் நிலை.. சென்னையை தாக்கும் வெப்ப காற்று.. நாளையிலிருந்து புது சிக்கல்!

ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் கண்டிப்பாக வெப்ப காற்றுதான் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் கண்டிப்பாக வெப்ப காற்றுதான் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Recommended Video

    Weather Update : Chances for rain over Tamil Nadu | Amphan Cyclone

    தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 650 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது.

    ஆனால் இது தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுள்ளது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 1000 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது.இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும்.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்யும். அதேபோல் கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்றில் இருந்தே இந்த மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை நிலை

    சென்னை நிலை

    ஆனால் ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் கண்டிப்பாக வெப்ப காற்றுதான் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வெப்ப காற்று வீசும் என்கிறார்கள். இந்த புயல் தமிழகத்தை தாக்காமல் விலகி செல்கிறது. இதனால் ஏற்பட்ட காற்று மாறுபாடு காரணமாக வெப்ப காற்று வீசும்.

    வெப்ப காற்று

    வெப்ப காற்று

    அதாவது புயல் காற்று வங்கதேசத்திற்கு செல்லும், வெப்ப காற்று தமிழகத்தை நோக்கி வரும். நாளையில் இருந்து இந்த வெப்ப காற்று தமிழகத்தில் வீச தொடங்கும். சென்னைதான் இதனால் அதிகம் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த வெப்ப காற்றின் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். சென்னை மட்டுமின்றி கடலூர், புதுச்சேரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்ப காற்று வீச வாய்ப்புள்ளது.

    கத்திரி வெயில் எப்படி

    கத்திரி வெயில் எப்படி

    தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் தமிழகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இடையில் ஆம்பன் புயல் காரணமாக மழை அதிகரித்து வெயில் குறையும் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி இல்லாமல் தொடர்ந்து தமிழகத்தில் வெயில் அடிக்கிறது. ஆம்பன் புயல் காரணமாக சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது. இப்போது புதிதாக வெப்ப காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இரவு நேர காற்று

    இரவு நேர காற்று

    பகல் மற்றும் இரவு நேரங்களிலும் சென்னையில் இது போல வெப்ப காற்று வீச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சென்னையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக 36-38 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உள்ளது. நாளையில் இருந்து இந்த வெப்பநிலை அதிகரிக்கும் 44-45 டிகிரி செல்ஸியஸ் வரை சென்னையில் ஏற்படும் என்று கூறுகிறார்கள். பகலில் அதிகமாக வெப்ப காற்று வீசும் என்று கூறப்ப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+