மக்களே அலர்ட்! தமிழ்நாட்டில் இன்றும் தொடரும் மழை.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மழை தொடர்வதால் சில இடங்களில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துவிட்டது.. அதன் பின்னர் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், குமரிக்கடலில் சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட்டது.
இதனால் மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் தஞ்சை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்தது.

வானிலை
இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கூட விடுமுறை விடப்பட்டது. இருப்பினும், எதிர்பாராத விதமாகப் பெய்த இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டதால் மழை அப்படியே மெல்லக் குறையும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது

எங்கு மழை
இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வ மையம் பகிர்ந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுமுறை
நாளை (பிப்.5) முதல் வரும் பிப்.7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மழை தொடரும் நிலையில், இன்று தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த எதிர்பாராத மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
சவுதி வானில் அடுத்த அதிர்ச்சி! பீதியில் அஞ்சி ஓடும் பொதுமக்கள்! வளைகுடா நாட்டில் எதிர்பாராத பாதிப்பு -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications