அதிமுக திமுக கூட்டணி அமைத்தாலும் ஆட்சியமைக்க முடியாது.. தவெக பக்கம் காற்று வீசிய காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முடியாது என்பதை அறிந்த திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தவெக பக்கம் ஜம்ப் செய்துள்ளன. ஏனெனில் அவர்களிடம் மெஜாரிடிக்கான நம்பர் இல்லை. அதிமுக திமுக சேருவதாக வைத்தாலும் 47+57 சேர்த்தால் 105 இடங்கள் தான் வரும்.. பின்னாளில் கூட்டணி கட்சிகளும் முழுமையாக இணைய வேண்டும். அப்படிஇணைந்தாலும் பாமகவும் சேர வேண்டிய நிலை இருந்தது. அதற்கு இடதுசாரிகளும், விசிகவும் ஒப்புக்கொள்ளாது.. இப்படியான சூழலில் தான் தவெக கூட்டணியில் இடதுசாரிகள். விசிக, முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்துள்ளன.

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு அரசு அமைந்துள்ளது. முன்னதாக ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இன்னும் விஜய்க்கு கிடைக்காமல் இருந்தது. எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தால், எப்படியும் மாற்றுக்கட்சி ஆட்கள் வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நம்பிய தவெக, ஆட்சியமைக்க இரண்டு முறை உரிமை கோரியது. ஆனால் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொண்டு வந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

Even if the AIADMK and DMK were to join forces they would still face a numbers issue

இதனால் காங்கிரஸ் ஆதரவு தந்தாலும் ல் 5 முதல் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு தேவை என்கிற நிலை ஏற்பட்டது. இதில் விசிக, இடதுசாரிகள் ஆதரவு தந்தால் ஆட்சியமைக்க முடியும். அல்லது , அமமுக, பாமக , தேமுதிக போன்றவை ஆதரவு தந்தாலும் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை இருந்தது. ஏனெனில் தற்போதைய நிலையில் தவெகவிற்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளன. கூடுதலாக காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் ஆதரவை தந்துள்ளது.இன்னும் ஐந்து பேர் ஆதரவு தேவையாக இருந்தது.

ஏனெனில் இரண்டு தொகுதியில் ஜெயித்த விஜய் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால், காலியானால் தொகுதியில் சில மாதங்களுக்கு (தேர்தல் நடைபெறும் வரை) இன்னும் குறையும்.. எப்படி என்றாலு ஐந்து எம்எல்ஏக்கள் முதல் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு கண்டிப்பாக விஜய்க்கு தேவைப்படும். எனவே கூடுதல் எம்எல்ஏக்கள் ஆதரவை பெற தொடர்ந்து முயன்று வந்தார்,

இந்த சூழலில் திமுக + அதிமுக கூட்டணி வைத்து ஆட்சியமைக்க தகவல் பரவி வருகிறது. அதனை உண்மை என்று நம்பும் அளவிற்கு ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவின. ஆனால் திமுக அதிமுக சேர்ந்தால் ஆட்சியமைக்க முடியுமா என்றால், நிச்சயம் ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும், பாமக நான்கு இடங்கிளிலும், ஐயுஎம்எல் 2 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா இரண்டு இடங்களிலும், விசிக இரண்டு இடங்களிலும், பாஜக, அமமுக, தேமுதிக தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளன.

இதில் ஒருபேச்சுக்கு அதிமுக திமுக சேருவதாக வைத்தாலும் 47+57 சேர்த்தால் 105 இடங்கள் தான் வரும்.. ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு இடங்கள் உள்ளன. சிபிஎம் 2 இடங்கள், சிபிஐ 2 இடங்கள் வைத்துள்ளது. ஐயுஎம்எல் 2, தேமுதிக 1இடங்கள் வைத்துள்ளது. 114 இடங்கள் தான் வரும். மீதமுள்ள இடங்களில் அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக ஆதரித்தாலும் 115 தான் வரும். அதன்பிறகு ஆட்சியமைக்க வேண்டும் என்றால் பாமக ஆதரவு வேண்டும். பாமகவின் 4 சீட் ஆதரவு கிடைக்கும் என்றால் 119 வரும்.. ஆனால் அப்படி நடந்தால் விசிக, இடதுசாரிகள் கூட்டயை ஒப்புக்கொள்ளாது. எனவே பாமக+ விசிக+இடதுசாரிகள் இணைந்து ஆட்சியமைக்க சாத்தியமே இல்லை.. அதேபோல் பாஜகவிடம் உள்ள ஒரு இடம் யாருக்கும் சாதகமாகாது..

எனவே கிட்டத்தட்ட திமுக, அதிமுக இணைந்தாலும் ஆட்சியமைக்க முடியாது என்பதே எதார்த்தம் ஆக இருந்தது. அதேநேரம் இப்போது விஜய்க்கே வாய்ப்பு இருந்தது. இந்த சூழலில் மே 10ம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால் ஆளுநர் ஆட்சி அமலுக்குவரும் என்கிற நிலை இருந்தது. அதனை கருத்தில் கொண்டு, இடதுசாரிகள் தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. விசிகவும் மின்னஞ்சல் மூலம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பிவிட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் அனுப்பிவிட்டது. ஒட்டமொத்தமாக 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தற்போது விஜய்க்கு கிடைத்துள்ளது. பெரும்பான்மையைவிட மூன்று இடம் அதிகமாகவே விஜய்க்கு கிடைத்துள்ளது. இதனால் ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்துள்ளார். நாளை முதல்வராக விஜய் பதவியேற்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+