ஓபிஎஸ் இருக்கை.. 'சபாநாயகரே நினைத்தாலும் மாற்ற முடியாது' "கருத்தா சொல்லும்" கண்ணன்
சென்னை: ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கோரிவரும் நிலையில், "பாநாயகரே நினைத்தாலும் ஓபிஎஸ் இருக்கையை மாற்ற முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், இன்னமும் எடப்பாடி பழனிசாமியின் அருகிலேயே அமர வைக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பி, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைதலைவர் தான் அந்த இருக்கையில் அமர வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைதலைவர் பதவி என்ற ஒன்று இல்லவே இல்லை.

சட்டசபையில் அகராதியில் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டும் தான் இருக்கிறது என்று பதில் அளித்தார். மேலும் ஓபிஎஸ் இருக்கை விவகாரத்தில் சட்டசபையில் யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும், இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளது, மரபு படியே செயல்படுவேன் என்றும் கூறினார். மேலும் ஓபிஎஸ் இருக்கையை மாற்றவும் மறுத்துவிட்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அவையை விட்டு வெளியேற்றவும் சபாநாயகர் உத்தரவிட்டனர். இதன்படி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், இன்னமும் எடப்பாடி பழனிசாமியின் அருகிலேயே அமர வைக்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்நோக்கத்துடன் திமுக செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் இருக்கை இன்னமும் மாற்றப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்எல்ஏ யாரையாவது அதிமுகவினரோடு அமர வைப்பாரா, அல்லது திமுகவினரின் இருக்கைக்கு நடுவில் அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் "சபாநாயகரே நினைத்தாலும் ஓபிஎஸ் இருக்கையை மாற்ற முடியாது" என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், அரசியல் கட்சி தலைவராக ஒருவரை தேர்வு செய்வது என்பது வேறு, எம்எல்ஏ ஆன பின்னர் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருவரை தேர்வு செய்வது என்பது வேறு.. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படும் போது, இவர்கள் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்றம் அங்கீகரித்தது. ஒருங்கிணைப்பாளர் அங்கீகரித்து தான் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்து கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சி துணைதலைவராக ஓ பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். எனவே அதிமுக என்பது இவர்கள் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதியாக சொல்ல வேண்டும். சட்டமன்றத்தில் மறுபடியும் எம்எல்ஏக்கள் தேர்வு செய்து ஒரு கூட்டத்தை போட்டு, நாங்கள் தனி அமைப்பு, அவர்கள் தனி அமைப்பு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.. ஒப்புக்கொண்ட பின்னர்தான் மாற்ற முடியும்.. அதுதான் சட்டமன்ற விதி, அதுதான் சட்டமன்ற மரபு, அதைத்தான் சபாநாயகர் சரியாக கடைபிடித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இஷ்டத்திற்கு வளைப்பதற்கு இது அதிமுக விதியல்ல.. சட்டமன்ற விதி.. சபாநாயகரே நினைத்தாலும் இந்த சட்டமன்ற விதியை திருத்த முடியாது..மாற்ற முடியும்.." இவ்வாறு கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications