சுனாமியே வந்தாலும்.. பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி வக்கீல்! திக்கு முக்காடி நின்ற அமலாக்கத்துறை
சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் இன்று அவரின் மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ முக்கியமான வாதங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தார்.
செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்படி என் கணவரை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கான காரணத்தை கூறவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார்.

இந்த ஆட்கொணர்வு மனு மீது முன்பே நடத்தப்பட்ட விசாரணையில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் வைத்துள்ளது.
முக்கிய வாதங்கள்: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் இன்று அவரின் மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ முக்கியமான வாதங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தார். அவர் வைத்த வாதங்கள் பின்வருமாறு..
காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும், நீதிமன்ற காவலில் நீடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தெரிந்தே, அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. ஏற்கனவே நீதிமன்ற காவல் 15 நாட்கள் கொடுக்கப்பட்ட பின் எப்படி அமலாக்கத்துறை காவலில் எடுக்க முடியும்.
நீதிமன்ற காவல் 15 நாட்கள் கொடுக்கப்பட்ட பின் எப்படி அமலாக்கத்துறை காவலில் எடுக்க கூடாது. சுனாமியே வந்தாலும் அது நடக்காது. கொரோனாவே மீண்டும் வந்தாலும் அது நடக்க கூடாது. அப்படி இருக்க அமலாக்கத்துறை எப்படி கஸ்டடி எடுக்க முடியும்.
சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே. சட்டத்திலேயே அதற்கு இடம் இல்லையே. பின்னர் எப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இதை பல முறை தெளிவுபடுத்தி உள்ளது.
அப்படி இருக்க இவர்கள் எதை வைத்து கஸ்டடி கேட்டனர். இந்த கைதில் சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சுங்கத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த பிரிவில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே.
ஆகவே இது சட்ட விரோதமான கைதுதான். 41 ஏ படி கைது செய்தால் கைது செய்யப்பட்ட நபரிடமும் குடும்பத்தினரிடமும் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு கைது செய்யவே உரிமை இல்லாத போது,. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று என். ஆர் இளங்கோ வாதம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications