விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தால் திமுகவிற்கு பின்னடைவா? சட்டென வைரமுத்து சொன்ன 'நறுக்' பதில்
சென்னை: கடந்த சில தினங்களாகவே விஜய் குறித்த பேச்சுக்களும் விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு வைரமுத்து பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து உதவித் தொகை வழங்கியதோடு பாராட்டு சான்றிதழும் கொடுத்து கவுரப்படுத்தினார். நடிகர் விஜய்யின் இந்த நடவடிக்கை அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

இதனால் கடந்த சில தினங்களாகவே விஜய் குறித்த பேச்சுக்களும் விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்துவிடம் விஜய் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- சினிமா நடிகரும் ஒரு மனிதன் தானே.. சினிமா நடிகரும் ஒரு வாக்காளர் தானே.. சினிமா நடிகருக்கும் உரிமை உண்டு தானே..
அவரும் ஒரு இந்திய குடிமகன் தானே.. அரசியலுக்கு சினிமா நடிகர் என்றோ.. தனி மனிதன் என்றோ.. கல்வியாளர் என்றோ.. வேறுபாடு கிடையவே கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம் உரிமை கொண்டு.. ஆனால் அரசியல் அவர்களை தேர்ந்தெடுக்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் அரசியலுக்கு வருவதனால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய வைரமுத்து, "அப்படி நான் கருதவில்லை. அதற்குறிய காலமும் மிகக் குறைவாக இருக்கிறது. அதற்குறிய காலம் இன்னும் அதிகமாக வேண்டி இருக்கிறது.. கணிப்பதற்கு.. முதலில் இப்போது தான் பூ பூத்திருக்கிறது. அது பிஞ்சு-ஆகுமா.. காயாகுமா.. கனியாகுமா என்பதை காலம் பொருத்திருந்து கணித்து சொல்ல வேண்டும்" என்றார்.
தொடர்ந்து ஹீரோவாக நடித்துவிட்டாலே மக்கள் மனதில் இடம்பிடித்துவிடலாம்.. அரசியலிலும் ஜெயித்து விடலாம்.. முதல்வராகி விடலாம் என நினைப்பது கேவலமான செயல் என்று சீமான் சொல்லியிருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு வைரமுத்து கூறுகையில், "சீமான் சொல்வதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.. சீமான் சொல்வது என்னவென்று தெரியுமா..
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்பாக பேசிய வைரமுத்து, "தமிழ்நாட்டு ஆளுநர் இன்னும் மிக சரியாக, தமிழ்நாட்டு அரசோடும்.. தமிழ் மக்களோடும்.. ஒத்துழைக்க வேண்டும். தமிழ் மக்களின் மனநிலையை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது" என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications