பிராப்ளம் பேசினாலே.. சூப்பர் ஸ்டார் பேச ஆரம்பித்ததுமே.. வாயில் கொழுக்கட்டையா? அதிர விட்ட ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மன் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.. ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் உள்ளார்.. ஆபரேஷன் தியேட்டரில் ரஜினி கையில் கத்தியுடன் ஒருவரை அடித்து கீழே படுக்கவைத்திருக்கும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் விழாவில் ரஜினிகாந்த் பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.. அப்படி என்ன பேசினார் சூப்பர் ஸ்டார்?

உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்தடுத்த திரைப்பட அறிவிப்புகளும், படப்பிடிப்புத் தளத் தகவல்களும் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

Rajinikanth

அப்படித்தான் இப்போதும் ரஜினியின் புதிய படமான தர்மன் படத்தின் போஸ்டர் மற்றும் படக்குழுவினரின் கருத்துக்கள் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் உற்று நோக்கச் செய்துள்ளன.

தர்மன் - ரஜினி படம் போஸ்டர்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது பட அறிவிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்திற்கு இப்போது தர்மன் என பெயரிட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார், சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர், அனிருத் இசையமைக்கிறார் போன்ற தகவல்கள் தர்மன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இதுவரை ரஜினிகாந்த் பலவிதமான கேரக்டர்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும், இந்த தர்மன் படத்தில் அவர் ஏற்றுள்ள கேரக்டர் முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே சமயம் அவரது வழக்கமான ஸ்டைல் மற்றும் மாஸ் அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது தற்போதைய தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.

தர்மன் பட விழா

தர்மன் பட விழாவில் பேசிய டைரக்டர், மிக முக்கியமான சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், "இது ஏதோ ஏழை எளிய மக்களுக்கான 5 ரூபாய் மருத்துவரின் படம் கிடையாது. மாறாக, 'தர்மன்' என்கிற பெயருடைய ஒரு மாஸான, ஸ்வாக் நிறைந்த டாக்டரின் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட்டான 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்திருந்ததோ, அதே போன்ற ஒரு தரமான அனுபவத்தை இந்த படமும் நிச்சயம் வழங்கும்" என்று உறுதி தெரிவித்தள்ளார்.

ரஜினிகாந்த் பேச்சு

இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேச அழைக்கப்பட்டார். அப்போது மைக்கை பிடித்த ரஜினி, வெளிப்படையாகவும் எதார்த்தமாகவும் நிறைய விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார்.

"நான் பேசினாலே பிரச்சனை தான். அது எனக்கும் பிரச்சனை, உங்களுக்கும் பிரச்சனை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள். பேசினால் இதோ பேசிட்டாரு என அதுக்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள். ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.

4வது டைரக்டர் அஸ்வத்

இந்த படத்திற்கு 4வது டைரக்டர் அஸ்வத். முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக அஸ்வத் இயக்க உள்ளார். சிபி சொன்ன கதை பிடித்திருந்தது. ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம், அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைச்சுட்டோம்.

ஆனால், கதையை நான் கேட்கல, நீங்களே கேட்டு சொல்லுங்க என கமல் சொன்னார். படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே கொஞ்சம் பயமாக இருந்தது. இந்த கதையெல்லாம் வேண்டாம் கமல், நீங்களும் கதை கேட்டு ஓகே சொல்லுங்க என்றேன்.

அஸ்வத் மீது பெரிய பொறுப்பு இருக்கு. அதுக்காக அவரை மட்டும் சொல்லவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் டிராகன் படம் பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் இருந்தது.

கமல் நட்பு - மேனரிசங்கள்

கமல் உடனான நட்பு பற்றி சொல்லவே தேவையில்லை. 1975களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் வந்தேன். "இளமை ஊஞ்சலாடுகிறது" படம் கமலால் தான் பண்ணினேன். அதில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க வேண்டியது. கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் நான் செய்த மேனரிசங்களை பாராட்டியவர் கமல். அவர் செய்த உதவியாகட்டும், ஊக்கமாகட்டும் சொல்ல முடியாதவை'' என்று ரஜினிகாந்த் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+