கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் அயராதுழைப்போம்.. ஓ. பன்னீர்செல்வம் புகழஞ்சலி
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம், 2015ம் ஆண்டின் இதேநாளில் (ஜூலை 27), ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை, ஒட்டு மொத்த நாடே அனுசரித்து வருகிறது. அவரது நினைவிடம் பூக்களால்அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே பலர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மக்களின் ஜனாதிபதி #APJAbdulKalam அவர்களின் நினைவு நாளான இன்று "இந்தியா வல்லரசாக வேண்டும்" என்ற அவரது கனவுமெய்ப்பட அனைவரும் அயராதுழைக்க உறுதியேற்போம்.
— O Panneerselvam (@OfficeOfOPS) July 27, 2019
கனவு காணுங்கள்; கனவுகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்! pic.twitter.com/Qp5s6FaNSe
இந்தநிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம். அதில், தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
"இந்தியா வல்லரசாக வேண்டும்" என்ற கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் அயராது உழைக்க உறுதி ஏற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனவு காணுங்கள்; கனவுகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications