போராட மட்டுமல்ல.. ஆயுதம் ஏந்தவும் தெரியும்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு
சென்னை: காங்கிரஸ்காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும், ஆயுதம் ஏந்தவும் தெரியும் எனக் கூறி பாஜகவை பொளந்து கட்டியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
காங்கிரஸ்காரர்களுக்கு மகாத்மா காந்தி மட்டும் தலைவரல்ல என்றும் தங்களுக்கு நேதாஜியும் தலைவர் தான் எனவும் கூறியிருக்கிறார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா விவகாரத்தை திசை திருப்பவே, ராகுல் மீதான இந்த விசாரணை நடப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு
சும்மா இருந்தவர்களை சுரண்டி விட்ட கதையாக, நாடு முழுவதும் சோர்ந்து கிடந்த காங்கிரஸ் தொண்டர்களை நேஷனல் ஹெரால்டு விவகாரம் எழுச்சி அடைய வைத்துள்ளது. ராகுல்காந்தியிடம் நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் அலை அலையாக பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி வருகின்றனர்.

ஆயுதம் ஏந்துவோம்
இந்தச் சூழலில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இது தொடர்பாக கூறுகையில், ''காங்கிரஸ்காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும், ஆயுதம் ஏந்தவும் தெரியும்'' எனக் கூறி பாஜகவை பொளந்து கட்டியிருக்கிறார். மேலும், காங்கிரஸ் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தால் தான் மோடி இன்று பிரதமராகி ஆட்டம் போட முடிவதாக அவர் சாடியிருக்கிறார்.

10 மணி நேரம்
ராகுல்காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்துகிறார்கள் என்றும் அப்படி விசாரணை நடத்தும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார் எனவும் கேள்வி எழுப்புகிறார். நுபுர் ஷர்மா விவகாரத்தை திசை திருப்பவே இந்த விசாரணையை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்காரர்களுக்கு மகாத்மா காந்தி மட்டும் தலைவரல்ல தங்களுக்கு நேதாஜியும் தலைவர் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அஞ்சாமல் கருத்து
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை பொறுத்தவரை எந்தவொரு வழக்கு விசாரணைக்கும் அஞ்சாமல், மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசக்கூடியவர். இன்று என்றல்ல ஆரம்பக்காலம் தொட்டே இது அவரது பாணியாகும். காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் அவர் கூறியிருக்கும் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications